பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 6.3 75. நோய்க்கிடங்கொடேல். நோய்க்கு-தேகத்தில் வியாதி தோன்றற்கு, இடம்-ஒராதா ரத்தைக், கொடேல்-என்றுஞ் செய்துக் கொள்ளாதே என்பதாம். மித மிகுத்தப் புசிப்புந் கிடங்கொடுத்த விடத்திலும், பல தேக போகத்திற்கு இடங்கொடுத்த விடத்திலும் வியாதி தோன்றி உடலை வதைப்பது உள்ள சுவாப மாதலின் இன்னின் னக் கொரூரச் செயல்களால் இன்னின்ன்ை இன்னினிய நோய் கண்டு உபாதைப்படுகிருனென் றுணர்ந்தும், அதனை மறந்தும் வாதைப்படுவது மக்களியல் பாதலின் அதினின்று விழிப்பான் வேண்டி நோய்க்கிடங் கொடேலென்று கூறியுள் GT staff. 76. பழிப்பன பகரேல். பழிப்பன-மற்றவர்களைப் பழித்தலும் இழிவு கூறுதலு மாகிய மொழிகளை, பகரேல்-மறந்தும் பேசாதே யென்பதாம். தனது குற்றங்களையுந் தனது குடும்பத்தோரிழிவுகளையும், தான் செய்யுமிழிய தொழிலாம் செயலையுங் கருதாது ஏனையோர் குற்றங்களையும், ஏனையோர் குடும்ப யிழிவையும், ஏனையோர் தொழிலிழிவையும் எடுத்துக் கூறுவதாயின் ஏனையோரிவனி ழிவையும், பழியையுமெடுத்துக் கூறியேளனஞ் செய்வதுடன் எல்லோர்க்கும் விரோதியாய் சகலரானுஞ் சீ, சீ யென்றிகழப் படுவான் ஆதலின் பகரு மொழிகளில் பழிப்பன பகரே லென்று கூறியுள்ளாள். 77. பாம்பொடு பழகேல். பாம்பு - விஷப்பற் பையை யுடைய, ஒடு - ஜெந்திைேடு, பழகேல்-எப்போதும் நேசிக்காதே என்பதாம். பற்களில் விஷப்பையை சேர்த்து வைத்துள்ள ஜெந்துக் களுடன் பழகுவதாயின் எக்காலத்திலேனும் ஒர்கால் அப்பையி லுள்ள விஷத்தை வெளியிடுவதற்கு வழிதேடும். வழிதேடுங் காரணமோ அதன் மீரிய கோபமேயாம். அக்கோபத்தால் கடித்து விடுத்த விஷமானது பழகியவன் தேக முழுவதும்