பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ 2 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் 72. நேர்பட வொழுகு. நேர்-சகலவருக்கும் நல்லவன் நேரானவனென்று, படகாணும் படி, ஒழுகு-நீ வாழக்கடவாயென்பதாம். நஞ்சுள்ள பாம்புகள் யாவும், பெரும்பாலும் சகலர் கண் களுக்கும் புலப்படாமல் உலாவும், நஞ்சிலா நீர் பாம்பு களோ சகலர் கண்களுக்கும் நேர்பட உலாவும். அதுபோல் நன்மெய்க் கடைபிடித்து சகலர் கண்களுக்கும் நேர்பட ஒழுகவேண்டு மென்பது கருத்தாம். 73. நைவன நணுகேல். நைவன-வாக்கால் நையவுரைக்கும் கூட்டத்தாரும் தேகத் தால் நையபுடைக்கும் கூட்டத்தாருமாகிய தீயரை, நணுகேல்நெருங்கிய வாழ்க்கையை புரியாதே என்பதாம். சுகதேகமும், சுகுணமும் தீயர் சேர்க்கையால் நைவத னுபவ மாதலின் அத்தகைய தீயச் செயலோரால் நைவன நணுகேல் என்று கூறியுள்ளாள். தன்னிற்ருனே கேட்டை வருவித்துக் கொள்ளுஞ் செயலுக்கு. நையலென்றும் நைவன வென்றுங் கூறப்படும். 74. நொய்யவுரையேல். நொய்ய-அன்பு மிகுத்தோர் மனமுடைய, உரையேல்-ஒரு வார்த்தையும் பேசாதே என்பதாம். அதாவது குடும்பத்தில் அன்பு திரண்டு வாழ்பவர்களையும் சினேகிதத்தில் அன்புதிரண்டு நேசிப்பவர்களையும் அடுத்து அவர்களுக்குள் திரண்டுள்ள அன்பை நொய்ய வுடைப்பதா யின் குடும்ப மென்னுங் கூடிவாழும் வாழ்க்கையுமற்று, சிநஹறித மென்னும் அன்புமற்று சேர்க்கைப் பிரிந்துபோம். அத்தகைய பிரிவினல் வாழ்க்கைக் கனத்தங்கேடுண்டாவதை யுணர்ந்த ஞானத்தாய் வார்த்தைப் பேசுவதில் நொய்யவுரையேல் என்று கூறியுள்ளாள்.