பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு Ꮾ 1 மீனுட்சிசுந்திரம் பிள்ளை மானுக்கர் கோவிந்தப் பிள்ளை யவர்கள் ஏட்டு பிரிதியிலும் (நுண்மெய் ஈழுவேல்), என்னும் வாசக பாடபேதமும் உள்ளது கண்டு உசாவுங்கால் நுண்மை நுகரேல் எனும் வாசகஞ் சிதைந் துள்ளதன்றி சகலதேச மக்களுக்கும் பொருந்தா பொருளுள்ளதால் நுண்மெய் நழுவேல் எனும் சகல மக்களுக்கும் பொருந்தும் வாசகத்தை வெளியிட் டுள்ளோம். 70. நூற்கலை கல். நூற்கலை-அறிவை வளர்க்குங் கலைநுாற்களை கல்-நீ வாசிக்கக் கடவாய் என்பதாம். அதாவது காமவெகுளி மயக்கங்களைப் பெருக்ககூடிய பல வகை நூற்களிருக்கின்றபடியால் அவற்றை கண்ணுேக் காமலும், கற்காமலும் அறிவை விருத்திச் செய்யக்கூடிய கலை நூற்களையே கற்கவேண்டுமென்பது கருத்தாம். தற்காலம் பதித்துள்ள புத்தகங்களில் நூற்பல கல் என்றிருந்த போதினும் புராதன வேட்டுப் பிரதிகளில் நூற்கலை கல்லென்றே வரையப் பட்டிருக்கின்றது. காக்கை பாடியம். பலநூல் கற்றுப் பாழடை வதினுங் கலைநூற் கற்று காட்சி வடிவாஞ் சிலைநுதற் காம சேட்டை யகற்றி யுலகமவர் மாட்டென்னலு முவப்பே. 71. நெற்பயிர் விளை. நெல்-நெல்லென்னும் பயிர் - தானியத்தை, விளை - நீ வுழுது பயிரிடு மென்பதாம். அதாவது சகல ஜீவர்க்கும் உணவாக விளங்கும் தானியம் நெல்லாதலின் அவற்றை வேண முயற்சி செய்து விளைவிக்க வேண்டுமென்பது கருத்தாம். பெளத்தர்கள் யாவரும் தங்கள் சுய பிரயோசனத்தைக் கருதாது பலர் பிரயோசனத்தையே மிகக் கருதுவராதலின் சகல ஜீவர்களுக்கும் பிரயோசனமாகும் நெற்பயிரை விளைவிக்கும்படி வற்புறுத்திக் கூறியுள்ளாள்.