பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி இரண்டு Ꮾ Ꮽ தன்மநோக்கத்தால் ஞானத்தாய் மிகைப்பட சொல்லேல் என்று கூறியுள்ளாள். திரிக்குறள். மறந்தும் பிறன்கேடு சூழற்க குழி னறஞ் சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. நீதிவெண்பா. வெய்யோன் கிரணமிகச் சுடுமே வெய்யவனில் செய்யோன் கிரணமிகத் தீதாமே-வெய்யகதிர் எல்லோன் கிரணத் தெரியினிலு மெண்ணமிலார் சொல்லே மிகவுஞ் சுடும். 90. மீதுாண் விரும்பேல். மீஅதிக ஊண்-புசிப்பை, விரும்பேல்-இச்சியாதே என்பதாம். அதாவது மிதமின்றி மீதூண் இச்சிப்பவர்க்கு சோம் பலும் மந்தமுண்டாகி சர்வ தொழில் விருத்திகளுங் கெடுவ தன்றி சுற்றத்தாரும், பெருவயற்ருேனென்றிகழப் பேரெடுப் பான். ஆதலின் மிதாகாரம் புசித்து வித்தியா விருத்தியையும், அறிவின் விருத்தியையும், பெருக்கி சுகவாழ்வைப் பெற வேண்டுமென்னுந் தர்மசிந்தையால் அதிகப் புசிப்பை விரும்பா தேயுங்களென்று கூறியுள்ளாள். நீதிவெண்பா. ஒருபோது யோகியே யொண்டளிர்ச் சைமாதே இருபோது போகியே யென்ப - திரிபோது ரோகியே நான்கு போதுண்பா னுடல்விட்டுப் போகியே யென்று புகழ். 91. முனைமுகத்து நில்லேல். முனை-கூறிய அம்பையேந்தி முனைந்தோன், முகத்துஎதிரில், நில்லேல்-நிற்காதே யென்பதாம். எப்படியெனில் எய்யவேண்டியவன் தவறிடில், எதிர்த் தோன்றியவன் மீது அவ்வம்பு படநேரிடு மாதலின் சினந்து