பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 க. அயோத்திதாளிலப் பண்டிதர் முனைந்தோர் எதிர் நிற்கலாகாது ஒருவனை நோக்கிவிடும் அம்பின் முன் மற்ருெருவன் நிப்பாயிைன் அது தவறி யிவன் மீது பட்டு கலகத்தை யுண்டுசெய்யும் என்பது கருத்து. 92. மூர்க்கரோடிணங்கேல். மூர்க்கர்-கோபிகள், ஒடு-உடன், இனங்கேல்-நெருங்கே லென்பதாம். முற்கோப மிகுந்த மூர்க்கரை நேசிப்பதனால் இவனுமோர் மூர்க்கனென்று, மற்றவர் மதிப்பதுடன் நல்லோர் நெருங்கவு மாட்டார்கள். நெருங்கினும் நேசிக்கமாட்டார்களென்பது கண்டு, நல்லவனென்று விளங்குங்கால் மூர்க்கரது கேண்மெய் தோன்றின், நல்லவனென்னும் பெயரற்று சுகமிழப்பா னென்னுங் கருணையால், மூர்க்கரோடிணங்கே லென்று கூறியுள்ளாள். நீதிவெண்பா. நல்லொழுக்க மில்லா ரிடஞ் சேர்ந்த நல்லோர்க்கு நல்லொழுக்க மில்லாச்சொ னண்ணுமே - சொல்லிவிடின் பாம்பென வுன்னரோ பழுதையே யாலுைந் தாம்பமரும் புற்றெடுத்தக் கால். 93. மெல்லியா டோள் சேர். மெல்லியாள்-மிருது வாக்குடையவள், தோள்-உடன், சேர்-கூடிவாழ்கக் கடவாயென்பதாம். மெல்லிய வாக்கும் மெல்லிய செயலும் மெல்லிய நடையு முடையாளை இல்லாளாக்கி வாழக்கடவா யென்பதாம். அறப்பளிசுர சதகம். கணவனுக் கினியளாய் மிருது பாஷியாய் மிக்க கமல நிகர் ரூபவதியாய் காய்சினமி லாளுமாய் நோய்பழியிலாத தோர் கால் வழியில் வந்தவளுமாய் மணமிக்க நாணமட மச்சம் பயிர்ப்பென னருமினிய மார்க்கவதியாய்