பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 83 நாலடி நானுாறு உடாஅத முண்ணுதுந்த முடம்பு செற்றுங் கெடாஅத நல்லறமுஞ் செய்யார்-கெடாஅது வைத்தீட்டி ரிைழப்பர் வான்ருேய் மலைநாட வுய்த் தீட்டுந் தேனிக்கரி, 5. உண்டிசுருங்குதல் பெண்டிற்கழகு. உண்டி - உண்னும் புசிப்பை, சுருங்குதல் - மிதாகாரத்தில் நிறுத்தல், பெண்டிர்க்கு - பெண்களுக்கு, அழகு - சிறப்பாகும். அதாவது பெண்கள் தங்களது புசிப்பை அதிகமுமல்லாது கொஞ்சமுமல்லாது புசிப்பார்களாயின் தன் கணவனையும் பந்துக்களையும் வரும் விருந்தினரையும் அன்புடன் போஷிப் பார்கள். அங்கனமின்றி பெருந்திண்டியை விரும்புவரேல் தன் கணவரையும், பந்துக்களையும், விருந்தினையும் வோம்டார் களென்பது திண்னமாதலின் உண்டி சுருக்கி வாழ்தலே இல்வாழும் பெண்களுக் கினியதென்று கூறியுள்ளாள். நீதிநெறி விளக்கம். கற்பின் மகளிர் நலம்விற் றுணவுகொளா பொற்ருெடி நல்லார் நனிநல்லர் - மற்றுத்தங் கேள்வர்க்கு மேதிலர்க்குந் தங்கட்கு தங்கிளைஞர் யாவர்க்குங் கேடு சூழார். 6. ஊருடன் பகைக்கின் வேருடன்கெடும். ஊருடன் - ஒர் கிராமத்துட் சேர்ந்து வாழும் எல்லோரு டனும், பகைக்கின் - விரோதித்து கொள்ளின், வேருடன் - தனது புத்திரமித்திர சந்ததியோர்களுடன், கெடும் - சீரழிவார்க ளென்பதாம். ஆதலால் ஒருவருக்கொருவர் உபகாரிகளாக விளங்க வேண்டுமென்றும், ஒருவருக்கொருவர் ஆதரவாக யிருக்க வேண்டுமென்றும், எண்ணமுடையவர்களாய் ஒரிடஞ் சேர்ந்து வாழ்தற் காரம்பித்தவர்கள் வாழ்க்கை எண்ணத்தை விடுத்து விரோத சிந்தையைப்பெருக்கிக் கொள்வதாயின், அக்குடி வாழ்க்கையில் தான் கெடுவதுமன்றி தனது குடும்பசம்பந்த