பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 க. அயோத்திதாளலப் பண்டிதர் முள்ள யாவருங் கெடுவார்களென்றுணர்ந்த ஞானத்தாய் ஊராரெல்லோருடனும் விரோதித்துக் கொள்ளாதீர்களென்று கூறியுள்ளாள். 7. எண்ணுமெழுத்துங் கண்ணெனத்தகும். எண்ணும் - கணிதத்தில் (அ) எட்டென்னும் வரிவடிவும், எழுத்தும் - அட்சரத்தில் (அ) அகரமென்னும் வரிவடிவம் உண்மெய்ப் புறமெய்யென்னு மிரண்டையும் கூடியக் கண் ணென - அருட்கண்ணும் ஞானவிழியென, தகும் - கூறுத லொக்கு மென்பதாம். அதாவது (அ) அகரமா முதலெழுத்தின் சுழியே ஞான சாதகர்க்கு உள்விழி பார்வை நிலையா தலின் எண்ணுக்கு (அ) எட்டாகவும் எழுத்தில் அகரமாகவும் விளங்கும் வரிவடிவே ஞானக் கண்னென்று விளக்கியுள்ளாள். திரிக்குறள். எண்ணென்பவேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு. ஞானக்கும்மி கட்டுபடாதந்த வச்சுமட்டம் - அதன் காலே பன்னிரண் டாகையில்ை எட்டுக் கயிற்றில்ை கட்டிக்கொண்டால் - அது மட்டுபடுமடி ஞானப்பெண்ணே. அறநெறிச்சாரம். தன்னேக்குந் தெய்வம் பிறிதில்லை தான்றன்னைப் பின்னமனமறப் பெற்ருனேல் - என்னை எழுத்தெண்ணே நோக்கி யிருமெயுங் கண்டாங் கருட் கண்ணே நிற்பதறிவு. 8. ஏவாமக்கள் மூவாமருந்து. ஏவா - பெரியோரேனும், தாய் தந்தையரேனும் ஒன்றை நோக்கி யேவல், கூறுவதற்கு முன்பு மக்கள் - மநுக்களவற்