பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் அறநெறிச்சாரம். முற்பிறப்பிற்ருன் செய்த புண்ணியத்தி னல்லதோர் இற்புறத்தின் புரு நின்றவ - ரிப்பிறப்பே பின்னுங் கருதுமே வேதங்கடிந் தறத்தை முன்னு முயன்ருெழுகற் பாற்று. 13. அஃகமுங்காசுஞ் சிக்கென்றகற்று அஃகமும் - தேகத்தா லுண்டாகுங் குற்றங்களையும், காசும் மனத்திலெழுவுங் களங்கங்களையும், சிக்கென - பாசபந்தக் கயிற்றின் வலையென, அகற்று - கண்டு நீக்கிவிடுமென்பதாம். காஸ் யென்னும் பாலிமொழிக்கு களிம்பு ஆசா பாசமென்னும் பொருளைக் குறித்திருக்கின்ருர்கள். அருங்கலைச் செப்பு. ஆசாபாசத்தோடஃக விருளகற்றி பேசாதான் பெற்ற பலன். 14. கற்பெனப்படுவது சொற்றிரும்பாமெய். கற்புயெனப்படுவது-பெண்களுக்குக் கற்பென்று கூறப்படுவது, சொல் கணவன் வாக்குக்கும், மாமனர் மாமியார் வாக்குக்கும் திரும்பாமெய் - கோணுமல் நடக்குந் தேகத்தைப் பெற்றவள் என்பதாம். அதாவது இல்லா ளென்னும் மனே வாழ்க்கைக் குடையவள் கணவனையே தெய்வமாக பாவித்து அவனது வாக்கை கடவாமலும் மாமன் மாமியார் வாக்கை மீருமலும் நடக்குந் தேகத்தையுடையாளே கற்புடைய மகளிரென்று கூறப்படும். அறநெறிச்சாரம். வழிபாடுடையவளாய் வாழ்க்கை நடா அய் முனியாது சொல்லிற்றுச் செய்தாங் - கெதிருரையா தேத்தி பணியுமே வில்லாளை யாண்மகன் போற்றிப் புனையும் புரிந்து.