பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 க. அயோத்திதாஸப் பண்டிதர் 18. குற்றம்பார்க்கின் சுற்றமில்லை. குற்றம் - குடும்பமென்று கூடியவிடத்து தொடுத்த மொழி எடுத்தச் செயல் யாவற்றிற்குங் குற்றங்கூறித் திரிவதாயின், சுற்றமில்லை - குடும்பத்தோரென்னும் பெயரில்லாமற்போம் என்பதாம். ஒர் குடும்ப விவகாரத்துள் சொல்லுக்குச் சொல் குற்றம் பிடித்தலும், செய்கைக்கெல்லாம் குற்றம் பிடித்தலு மாகிய கொடுரச் சிந்தையை விருத்தி செய்வதால் குடும்பமென்னும் பெயரற்றுப் போவதுடன் வாழ்க்கையுங் குன்றுமென் றுணர்ந்த ஞானத்தாய் குடும்பமென்னும் வாழ்க்கையில் எடுத்த செயலுக் கெல்லாங் குற்றம் பார்ப்பார்களாயின் சுற்றத் தோரென்னும் உரன்முறையோரில்லாமற் போய் விடுவார்களென்று கூறியுள்ளாள். 19. கூரம்பாயினும் வீரியம்பேசேல். கூரம் பாயினும் - உம்மிடத்திலுள்ள அம்பு மிக்க கூறுள்ளதாயினும், வீரியம் - மிக்க வல்லமையாகப் பேசேல் - சபதங்கூருதே யென்பதாம். அதாவது அம்பு கூரியதாயினும் வின்னணி சோர்வுற்றுப் போம். வின்னணி தளரா நிற்பினும் மெய் சோர்வுற்றுப்போம். மெய் சோர்வுராது வல்லமெயுற்றிருப்பினும் காலக்கேடயரும், ஆதலின் கால பலம், தன் பலம், வில்லின் பலம், நாணின் பலம், எதிரியின் பலம் யாவையும் நோக்காது தனது அம்பு கூரியதா யினும் அம்பை நம்பி வீரியம் பேசலாகாது என்பது கருத்து. 20. கெடுவதுசெய்யின் விடுவதுகருமம். கெடுவது செய்யின் - செய்யுந்தொழிலில் கேடுண்டா மாயின், விடுவது - அச்செயலை விட்டுவிடுவதே, கருமம் - தொழிலுக்கழகாகும் என்பதாம். எடுத்து செய்யுங் கருமத்தில் கேடுண்டா மென்றுனர் வாராயின் அக்கருமத்தை கருவிகளுடன் விட்டுவிட வேண்டு மென்பது கருத்தாம்.