பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 9 1 தொடுத்த கருமத்தில் கேடுண்டென் றுணர்ந்தும் அதே கருமத்தை முடிக்க முயல்வாயிைன் அவன் கெடுவதுடன் அவன் சந்ததியோருங்கெட்டு அவனையடுத்த கருமிகளும், கருவிகளும் பாழடைந்துபோமென் றுணர்ந்த ஞானத்தாய் கெடுதியுண்டாகுஞ் செயலை விடுவதே கருமமென்று கூறியுள்ளாள். 21. கேட்டிலுறுதி கூட்டுங்குறைவை. கேட்டில் - தனசம்பத்தேனும், தானிய சம்பத்தேனுங் குறைந்துக் கெடினும், உறுதி - பொருள் போச்சுதேயென் றுள்ளங் கலங்காது திறத்தில் நிற்பாயிைன், குறைவை - குறைந்த பொருள்யாவும்; கூட்டும் - சேரு மென்பதாம். மக்கள் சேர்ந்துவருந் தானியங் குறைந்த தென்றும், தனங்குறைந்த தென்றுங் கலங்காது முன்னவற்றை சேகரித்த முயற்சி யிலிருப்பாயிைன் குறைந்த வஸ்துக்கள் யாவும் நிறைந்து வருமென்பது கருத்தாம். 22. கைப்பொருடன்னின் மெய்ப்பொருட்கல்வி. கைப்பொருள் - ஒவ்வொருவர்க் கைகளால் ஆளும் தனப் பொருள், தானியப் பொருள், தன்னினும் - அதனினும், மெய்ப் பொருள் - அழியாப் பொருள் யாதென்பீரேல், கல்வி - அறிவை விருத்திபெறச் செய்யுங் கலைநுாற்களே என்பதாம். அதாவது அவனவ ளுள்ளத்திற் பதிந்துள்ள மண்பொருளி னழகும். பொன் பொருளினழகும், பெண் பொருளி னழகுந்தோன்றி தோன்றி கெடுவது சுவாபமாகும். கல்வியென் னும் மெய்ப்பொருளோ கற்றவளவினின்று கலை நூல் உசாவுவனேல், அதன் பலனும், அதன.ழகும் அதனெலியும் இவனதுருவுங்கான தழிந்த விடத்தும் பிரகாசிக்கு மென்பதாம். மூவர் தமிழ் - நாலடி நானுறு. குஞ்சியழகுங் கொடுத்தானைக் கோட்டழகும் மஞ்சளழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யா மென்னு நடுவுநிலைமையால் கல்வி யழகே யழகு