பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.48 க. அயோத்திதாளலப் பண்டிதர் கேளாதுபோலிருந்த காலத்தில் சில பெண் மக்களுடன் மகமதியர்கள் புருஷகலப்பால் புத்திரவிருத்தி யுண்டானபோது மகமதிய புருஷ நிறை யொன்றும், இப்பெண் மக்கள் நிறை அரையுமாகக்கூட்டி அப்பிள்ளையை தமிழில் ஒன்றரை சாதிக்குப்பிறந்த பிள்ளையென்றும், துலுக்கில் “தேடென்றும்” வழங்கிவந்தப் பெயர் தங்களை அவமதிக்கின்றதென்றெண்ணி தாங்கள் செல்லுமிடங்களிலெல்லாம் 'தேடென்ருல்” பறையர்களைக் குறிக்கும் பெயரென்று கூறி அவற்ருலு மிழிவடையச்செய்துவந்தார்கள். பிரிட்டிஷ் துரைத்தனத்தார்வந்து தோன்றிய காலத்தில் மகமதியர்களைப்போல் சும்மாவிராது நீங்கள் பிராமணர்க ளென்ருல் எவ்வகையால் உயர்ந்துபோனிர்கள் சண்டாளர்க ளென்ருல் அவர்கள் எவ்வகையால் தாழ்ந்துபோர்ைகளென்று கேழ்க்கும்படி ஆரம்பித்துக்கொண்டதிலுைம் இத்தேசப் பூர்வக்குடிகளில் கம்மாளரென்போர் வேஷப்பிராமணர்களுக் கெதிரடையாகத் தோன்றி இவர்களை ஜோதி சங்கமர்களுக்கு சமதையானவர்களென்றும், எங்களது சுப அசுப காரியங்களுக்கு இவர்கள் குருக்களல்லவென்றுங் கண்டிக்க ஏற்பட்டதிலுைம் தங்களை சிறப்பித்துக்கொள்ளத்தக்க ஒர் புத்தகத்தை யெழுத வாரம்பித்துக்கொண்டார்கள். அப்புத்தகத்தையுந் தங்களிஷ் டம்போல் வரைந்துக் கொண்டால் இத்தேசத்தோரங்கீகரிக்க மாட்டார்களென் றெண்ணி அறப் பள்ளிகளிற் றங்கியிருந்த சமணமுநிவர்கள் தாபர சாஸ்திரங்களும், வானசாஸ்திரங்களும், பூமிசாஸ் திரங்களும், அளவ சாஸ்திரங்களும், இரிடப சாஸ்திரங்களும் வரைந்துவைத்தகாலத்தில் மது மக்களுக்கென்று நீதிசாஸ் திரங்களும், ஞான சாஸ்திரங்களும், பொதுவாய உலகநீதி சாஸ்திரங்களையும் வரைந்துவைத்திருந்தார்கள். அதனுடன் வேதமொழி நான்கிற்குந் தெளிபொருள் விளக்க முப்பத்திரண்டு உபநிடதங்களுக்கும் சார்பாய் அறஹத்துக்களின் சரித்திரங் களாம் பதிநெட்டு ஸ்மிருதிகளையும் வரைந்துவைத்திருந்தார்கள். இவற்றுள் சுருதியென்னுமொழி பாலிபாஷைக்கு வரி வடிவ அட்சர மிராது வொலிவடிவாக பேசிவந்தகாலத்தில் மூவருமொழியாம் திரிபேதவாக்கியங்களை ஒருவரோதவும்,