பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 1 5 I பிராமணனென்போன் பிரம்மாவின் முகத்திற் பிறந்தது யதார்த்தமாயின் பாதத்திற் பிறந்தசூத்திரன் காரியுமிழவும், சிறுநீரை யூற்றவும், மலத்தை மீதெரியவுமாய அலட்சிய முண்டாமோ. இவர்களால் சூத்திரரென வகுத்துள்ள மக்களது மனத்தாங்கலானும் இவர்கள் யதார்த்த பிராமணர்களல்ல வென்னும் அலட்சியத்திலுைம் மேற்கூறியச் செயல்கள் நிறைவேறவும் அதற்கென்றே இவர்களது அதன்ம சட்டந் தோன்றவும் வழியாயிற்று. பிராமணனென்னும் வகுப்போரை மிக்க சிறந்தவர்க ளென்றும், தன்னை சூத்திரனென்றுந் தெரிந்துகொண்டவன் பிராமணனென்போன் தலைமயிரையும், தாடி மயிரையும், ஆண்குறியையும் பிடித்திழுப்பனே. இத்தகைய சட்ட முந்தோன்றுமோ இல்லை இச்சட்டந்தோன்றுங்கால் பிராமணனென்னும் உயர்வும், சூத்திரனென்னுந் தாழ்வும் இல்லையென்பதே சான்று. சூத்திரன் துவிஜாதிகளின் மனைவிகளைப் புணர்ந்தால் அவன் கோசபீஜம் இரண்டையும் அறுத்துவிடவேண்டியது. பிராமண னென்போன் எந்த ஜாதியோரிடம் புணர்ந்தாலும் ஒன்றுஞ்செய்யப்படாது இதுவுமோர் மநுதன்மம். பிராமணனென் போன் கொலைக் குற்றஞ் செய்தால் அவனது தலையின் மயிரை சிரைத்துவிடுவதே அவனுக்கு மரணதண்டனையாகும். மற்றசாதியோர் கொலைக்குற்றஞ் செய்தால் அவர்களது சிரமுண் டனமே கொலை தண்டனையாக்கும் ஒர் மதுதன்மம். இம்மனுதன்ம சாஸ்திரமானது பெளத்தர்களின் பதிநெட்டு தன்ம சாஸ்திரங்களுக்கும் நேர் விரோதமானதும், இத்தேசத்து மக்கள் யாவருடைய சம்மதத்திற்கும் உட்படாததும், நீதிநூல் யாவற்றிற்கும் எதிரிடையானதும், தங்களது பிராமண வேஷத்திற்கே வுரித்தானதுமாகத்தங்களது மனம் போனவாறு வரைந்துவைத்துக் கொண்டபடி யால் அதிற்கூறியுள்ள அதுலோ மசாதி, பிரிதிலோமசாதி, அந்தராள சாதி, பாகியசாதியானேர் ஒருவருந்தோன்ருமல் அன்னுரலிற் கூறியிராத முதலியார்சாதி,