பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—£6 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் பெளத்தர்கள் அவர்களை மிலேச்சர்கள் ஆரியர்களென்று கூறி தங்களது சீலம் நிறைந்த ஆச்சிர மங்களிலும், தாங்கள் வாசஞ்செய்யும் வீதிகளிலும் வர விடாமலடித்துத் துரத்திக் கொண்டே வந்தார்கள். இவ்வகையாகத் துரத்துண்டு வந்த மிலேச்சராம் வேஷ ப் பிராமணர்கள் இன்னுஞ் சிலநாள் திராவிட பெளத்தர்களால் துரத்துண் டிருப்பார்களாயின் ஆரியர்களின் கூட்ட முழுவதும் தங்கள் சுயதேசம் போய் சேர்ந்திருப்பார்கள். அக்கா லித்தேசத்திற் பரவிநின்ற ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிடசாதி யென்னும் நான்கு பாஷைகளை சாதித்து வந்தவர்களுட் சிலர், கல்வியும் ஞானமு மற்றவர்களாய் ஆரியர்களின் வேஷப் பிராமணத்தையும், அதலைவர்கள் சுகமாக சீவித்துவருஞ் செயல்களையும் நாளுக்கு நாள் கண்டு இவர்களு மத்தகைய பிராமண வேஷத்தை யாரம்பித்துக் கொண்டார்கள். சுதேசபாஷைக் குடிகள் பிராமண வேஷமிட்டுக் குடிகளை வஞ்சித்து சோம்பேறி சீவனஞ்செய்ய வாரம்பித்துக் கொண்டதில்ை மேலும் மேலும் கல்வியற்றக் குடிகள் அவர்கள் வார்த்தைகளை நம்புவதற்கும், அவர்கள் கேட்டு க்கொள்ளும் வண்ணம் நடந்துக்கொள்ளுவதற்கும் ஆரம்பித்தபோது வேஷ ப் பிராமணர்களின் கூட்டங்கள் நாளுக்குநாள் பெருகிவரவும் அவர்கட் சொற்படி நடக்குங் கல்வியற்றக் குடிகளின் கூட்டம் அதனினும் பெருகவும் நேர்ந்து யதார்த்த பிராமண பெளத்த சங்கங்களை யழிக்கவும், பெளத்த சாஸ்திரங்களையும், பெளத்த மடங்களையும், பெளத்தவுபாசகர்கள் யாவரையும் நிலைகுலையச்செய்யவும் ஆரம்பித்துக் கொண்டார்கள். மிலேச்சர்களாம் ஆரியர்களின் பிராமண வேஷம் பெருகுவதற்கும் அவர்களது மிலேச்சம் நீங்கி கனமடைவதற்கும் இத்தேசத்தோர்களின் பிராமணவேஷமே மிக்க வநுகூலமாகி விட்டது. அதல்ை திராவிட பெளத்தவுபாசகர்கள் ஆரியர்களைக் காணு மிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்திக்கொண்டே வரும் வழக்கங்களுக்கு சிற்சில தடைகளுண்டாகி தாங்கள் வாசஞ்