பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் இந்த வரலாற்றை வெளியிடுகிறோம்?. அயோத்திதாஸப் பண்டிதரின் சிந்தனைகள் வரிசையில் நான்காவதாக இந்திரர்தேச சரித்திரம் என்னும் முக்கியமான இந்த நூலை வெளிக்கொண்டு வருகிறோம். இது இந்திய வரலாறு பற்றிய நூலாகும். பண்டிதர் இந்த நூலைத் தாம் இயற்றியதன் காரணத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆரிய மிலேச்சர்கள் "தங்களது பொய்க் கட்டுப்பாடுகளாம் சாதி பேதங்களுக்கும், பொய் மத பேதங்களுக்கும் உட்படாதவர்கள் யாவரையுந் தாழ்ந்த சாதிகளென வகுத்து நிலைகுலையச் செய்தற்கு பறையனென்னும் பெயரையும், சண்டாளனென்னும் பெயரையும், தீயரென்னும் பெயரையும் பலவகையாலும் பரவச்செய்து வந்தது மன்றி, அன்னிய தேசங்களிலிருந்து இவ்விடம் வந்து குடியேறிவர்களுக்கும் இழிவாக போதித்து” விட்டனர். இப்படிச் செய்துவிட்டு "டிப்பிரஸ் கிளாசை” சீர்திருத்தப் போகின்றோமென்னும் படாடம்ப மடித்துக் கொள்கின்றனர். "இத்தியாதி பொறாமெச் செயல்கள் யாவும் பெளத்தர்களைத் தாழ்த்தித் தலையெடுக்கவிடாமற்செய்த வஞ்சினக் கூற்றாதலால் அவற்றை சகல நீதிமான்களுக்கும் விளக்கி ஆறுகோடி மக்களின் அல்லலை நீக்கி யாதரிப்பதற்கே இவ் இந்திரர்தேச சரித்திரத்தை வெளியிட்டுள்ளோம்” என அயோத்திதாஸ்ர் குறிப்பிடுகின்றார். வரலாறு எழுதப்படுகின்ற முறைகள் பற்றியும், அவற்றிலுள்ள முரண்கள் குறித்தும் இப்போதைய சிந்தனை யாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்திய வரலாறு எழுதப் பட்டதில் காலனியாட்சியாளர்களின் நோக்கங்கள் கறைகளாகப் படிந்திருப்பதை அவர்கள் கண்டு பிடித்துக் கூறுகின்றனர். அவ்வப்போது வரும் ஆட்சியாளர்கள் தமது நலன்களுக் கேற்றபடி வரலாற்றை மாற்றி எழுதிக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம். தற்போதுள்ள ஆட்சியாளர்கள், அகழ்வாராய்ச்