பக்கம்:சகல கலாவல்லி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெண்டாமரையும் தண்டாமரையும் 3



கலைமகள் வெண்டாமரையில் வீற்றிருக்கிருள். நம் முடைய சமயத்தில் கடவுளைப்பற்றிய வருண்ணைகளுக் கெல்லாம் உள்ளுறை உண்டு. கடவுள் வடிவம், அவர் ஏறும் வாகனம், அவர் இருக்கும் கோயில் ஆகிய எல்லாம் சிற்சில குறிப்புகளைக் கொண்டுள்ளன. இந்தக் குறியீடுகள் "சிம்பாலிசம்’ (Symbolism) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அறிவு அதிகமாக அதிகமாகக் குறியீடுகளே அந்த அறிவைக் காட்டும் வெளியீடுகளாக இருக்கும். இன்றைய கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் மேலே போகப் போகக் குறியீடுகள் மிகுதியாக இருப்பதைக் காணலாம்.

முதல் வகுப்பில் படிக்கும் மாணாக்கன் ஒன்று முதல் ஐம்பது வரை எண்ணுகிருன். மூன்ருவது வகுப்பில் படிக்கிற மாணாக்கன் கூட்டல், கழித்தல் ஆகியவற்றைப் போடுகிறான், முதல் வகுப்பில் படிக்கிற மாணவன் ஒரு நாள் மூன்றாவது வகுப்புக்குப் போகிருன், கரும்பலகையில் ஆசிரியர் 4-2=2 என்று எழுதியிருக்கிருர், நாவிலிருந்து இரண்டைக் கழித்தால் இரண்டு என்று மூன்றாவது வகுப்பு மாணவன் அதைப் படிக்கிறான். முதல் வகுப்புப் பையனைப் பார்த்து அது என்ன என்று கேட்டால், நாலு, ஒரு கோடு. இரண்டு, இரண்டு கோடு, இரண்டு என்று படிப்பான். இங்கே ஒரு கோடு, இரண்டு கோடு என்பன முறையே ஒன்றிலிருந்து ஒன்றைக் கழிப்பதற்கும் மிச்சம் இன்னது என்பதற்கும் உரிய குறியீடுகளாக வந்துள்ளன. அவை வெறும் கோடுகள் அல்ல. சாமானியக் கணக்கிலேயே மேலே போகப் போக் இப்படிக் குறியீடுகள் இருப்பதைக் காணலாம். நம்முடைய சமயத்திலும் இப்படிப் பல குறியீடுகள் இருக்கின்றன. கோயில்களும், விக்கிரகங்களும் இத்தகைய குறியீடுகளே.

'குறிக ளும்அடை யாளமும் கோயிலும்
 நெறிக ளும்அவர் நின்றதோர் நீர்மையும்
 அறிய ஆயிரம் ஆரணம் ஒதினும்
 பொறியி லீர்உமக் கென்கொல் புகாததே'

என்று அப்பர் சுவாமிகள் சொல்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/12&oldid=967224" இலிருந்து மீள்விக்கப்பட்டது