பக்கம்:சகல கலாவல்லி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி மழை 農恩

பதையே அவன் பார்த்துப் பார்த்து மகிழ்வான். அதில் இறைவனேயே சண்டு அதைப் பறிக்காமல் நோக்குப வர்களும் இருக்கிருர்கள்.

"பார்க்கின்ற மலருடு நீயே இருத்தி, அப் பணிமலர் எடுக்க மனமும். நண்ணேன்"

என்று தாயுமானவர் கூறுகிருர் அல்லவா ?

இப்படியே, உலகத்திலுள்ள பொருள்களேக் கவிஞர்கள் பார்த்து அவற்றின் அழகை நுகர்வார்கள். இயற்கையின் எழில்க் கண்டு களிப்பார்கள். மனித மனத்தின் ஆழத்தை அறிவார்கள். அங்கே புரளும் எண்ண அலைகளைத் தெரிந்து கொள்வார்கள். அவர்கள் வெறும் கண் கொண்டு அவற்றைப் பார்ப்பதில்லை. உணர்ச்சியோடு பார்ப்பார்கள். அறிவுக் கண் கொண்டு பார்த்தால் பண்டங்களின் கூறு பா டு க ள் தெரியும். உ ன ர் ச் சிக் கண் கொண் டு பார்த்தால் முழு வடிவங்களின் அழகு தெரியும். உணர்வு விழி கொண்டு பார்க்கிறவர்கள் கவிஞர்கள்.

தாம் பார்த்ததை அவர்கள் கவியாக வடிக்கிரு.ர்கள். கண்டதைக் கண்டபடியே சொல்வதில்லே. அவற்றுள் சாரமானவற்றை எடுத்துச் சொல்வார்கள். -

கவிஞர்கள் இவ்வாறு சொல்வதைப் புலனெறி வழக்கம் என்றும், நாடக வழக்கு என்றும் பழம் புலவர்கள் சொல் வார்கள். இனியனவான பகுதிகளை யெல்லாம் திரட்டி ஒன்ருகச் சொல்வதால் நாடக வழக்கு என்று பெயர் பெற்றது. உள்ளம் கொண்டு தெள்ளித் தெளிப்பதளுல் புலனெறி வழக்கம் என்ருர்கள். . .

உள்ளதை உள்ளபடியே சொல்வது கலையாகாது. க்டல் நீரை அப்படியே குடத்தில் மொண்டு குடிப்பது போன்றது அது. உள்ளது போலத் தோற்றும்படி சொல்லவேண்டும். ஆங்கிலத்தில் Reality என்றும் Realism என்றும் இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/32&oldid=557863" இலிருந்து மீள்விக்கப்பட்டது