பக்கம்:சகல கலாவல்லி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியும் கவியும்

சிகல கலா வல்வி எல்லாக் கலைகளுக்கும் தலைவி. 'ஆய கலைகள் அறுபத்து நான்கினையும், ஏய உணர்விக்கும் என் அம்மை" என்று கம்பர் பாடுவார். எல்லா மொழி களுக்கும் அவள் தாய். அவள் அருள் கிடைத்தால் எந்தக் கலையையும் கற்கலாம்; எந்த மொழியையும் பயின்று புலமை பெறலாம். அதனுல்தான் குமரகுருபர முனிவர் இந்தி மொழியைக் கற்கும்பொருட்டு அவளைப் பாடிஞர்.

உலகத்தில் எத்தனையோ மொழிகள் உள்ளன. இந்தப் பாரத நாட்டில்தான் எத்தனே மொழிகளே மக்கள் பேசு கிருர்கள் : இந்த மொழிகளுக்கெல்லாம் ஆதி அந்தம் என்று வரையறுக்கும் கால எல்லேக்குள் அடங்கிய வரலாறுண்டு. எத்தனையோ மொழிகள் தோன்றி மறைந்து போனதும் உண்டு. - -

இவ்வாறுள்ள பல மொழிகளுக்குள் நீண்ட நெடுங்கால மாக உள்ள மொழிக்ள் உண்டு. அவற்றில் தோன்றிய சில நூல்சளின் பழமையை, இன்ன காலத்தான் என்று திட்ட மாகச் சொல்ல முடியாது. அத்தகைய தொன்மை வாய்ந்த மொழிகள் வடமொழியும் தமிழும். வடமொழி வேதம் எப்போது தோன்றியதென்று வரையறையாகச் சொல்ல முடியவில்லை, அப்படியே பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியம் என்று தோன்றியது என்ற ஆராய்ச்சிக்கு உறுதியான முடிவு இன்னும் உண்டாகவில்லை. அப்படி யாரேனும் தெரிந்து சொன்னலும் அதற்கும் முந்தியதென்று உரைக்கும் அகத்தியத்தின் காலத்தை வரையறுக்க முடியாது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/39&oldid=557870" இலிருந்து மீள்விக்கப்பட்டது