பக்கம்:சகல கலாவல்லி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை அநுபவமும் பயனும் 婷器

உள்ளத்தில் ஆழப் பதிந்து விடுகிறது. மனிதனுடைய உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் சொல்லிலே சிறை செய்து காட்டுகிருன். நாமே அந்த உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் கொண்டிருந்தாலும், நம்மாலே அவற்றை வெளிப்படுத்த முடிகிறதில்லை. கவிஞனே அவற்றைச் சொல் வடிவில் வடித்துத் தரும்போது, இவன் எப்படி நம் உள்ளத் தின் ஆழத்தில் பதிந்த உணர்வுகளே எடுத்துச் சொல்கிருன் என்று வியப்படைகிருேம். உணர்ச்சியை உடைய நம்மால் வெளியிட இயலாமல் நாம் ஊமையாக நிற்கிருேம், அவன் நம் உள்ளத்தின் அந்தரங்கத்தில் புகுந்து கண்டுகொன் டதைக் கவியாக வெளியிடும் போது, இது பெரிய மாய ஜால வித்தை!' என்று வியக்கிருேம்.

நாம் அநுபவிக்காத உணர்ச்சியாக இருந்தாலும், எண்ணுத எண்ணமாக, இருந்தாலும் கவிஞனுடைய பாட்டில் அவற்றைக் கண்டு தெளியும்போது, நாமும் அந்த உணர்ச்சியைப் பெறுகின்ருேம். துயரச் செய்தியை அவன் சொல்லும்போது நாமும் துயரத்தை அடைகிருேம். பக்தி உணர்ச்சியை எழுப்பும்போது நம் உள்ளத்திலும் பக்தி உணர்ச்சி மணக்கிறது. கோபம், தாபம், அவலம், நகை ஆகிய உணர்ச்சிகளைக் கவிதையின் வாயிலாக உணரும் போது ஒர் ஆச்சரியம் நிகழ்கிறது. நாமும் அந்த உணர்ச்சி யிலே ஈடுபடுகிருேம். ஆளுல் கோபம் முதலிய உணர்ச்சி நமக்கு இயல்பாக எழும்போது அவை நமக்கு இனிப்ப தில்லை. கோபித்துக் கொள்பவன், அந்தக் கோபம் அடங்கின போது, 'ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமாகக் கோபம் கொண்டோம்?' என்று எண்ணி இரங்குகிருன். ஆளுல் கவிதையில் வரும் கோபமோ அவலமோ நம்மிடத்தில் கோபத்தைப் போலவும் அ வ ல த் ைத ப் போலவும். உணர்ச்சியை உண்டாக்கினுலும் அவை தீங்கை விளப்ப தில்லை. அவற்றை மீண்டும் மீண்டும் பெற விரும்புகிருேம், கவிதையைப் பன்முறை படிக்கிமுேம், காரணம் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/62&oldid=557893" இலிருந்து மீள்விக்கப்பட்டது