பக்கம்:சகல கலாவல்லி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை அநுபவமும் பயனும்

திமிழில் பழங்காலத்தில் புலவர்கள் செய்யுண் எழுதிக் குவித்தார்கள். தாம் கண்ட காட்சிப் பொருள்களை அழகாக வருணித்துப் பாடல்களே இயற்றிஞர்கள். அவர் கள் கண்ட காட்சிகளே நாம் காணுவிட்டாலும் அந்தக் கவிதைகளைப் படிக்கும்போது அவற்றில் ஆழ்ந்தால் நம் மனக்கண் முன்னே அந்தக் காட்சிகள் தோன்றி இன்பம் பயக்கும். நாம் கண்ட காட்சிகளை அவர்கள் எடுத்துச் சொன்னலும், நாம் காளுத அழகை அந்தப் பாட்டுக் கனின் மூலம் அறிந்து இன்புறுவோம். சித்திரகாரன் ஒவியத் தில் தான் கண்டவற்றையும் கற்பனை செய்தவற்றையும் காட்டுகிருள். அவற்றைக் கண்ணுல் கண்டு மகிழ முடிகிறது. கவிஞனே சொல்லையே வண்ணமாக வைத்து, காட்சியைக் கோலம் செய்யும்போது அந்தக் காட்சி நம் உள்ளத்திலே ஒவியமாகப் பதிந்து இன்பத்தை உண்டாக்குகிறது. ஒவிய னுக்குக் கிழியோ சுவரோ வேண்டும்; வண்ணமும் தூரி கையும் வேண்டும். அத்தகைய கருவி ஏதும் இல்லாமல் கவிஞன் சொற்களைக் கொண்டே காட்சியை வகனந்து விடு கிருன் நம்முடைய உள்ளத்தைத் தாண்டிவிட்டு அத்த கைய காட்சியை அநுபவிக்கச் செய்து விடுகிருன். ஒவியனே விட வல்லவளுக விளங்குகிருன் கவிஞன்.

இதைவிட இன்னும் அருமையான காரியம் ஒன்றைக் கவிஞன் செய்துவிடுகிருன். மிக நுட்பமான கருத்துக்களைச் சொல்லிலே வடித்து நம் மனத்தில் பதிய வைக்கிருன். கருத்துப் பொருள் நுட்பமானது. அதைத் திட்பமான சொல்லிலே அமைத்துக் காட்டும்போது அந்தக் கருத்து நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/61&oldid=557892" இலிருந்து மீள்விக்கப்பட்டது