பக்கம்:சகல கலாவல்லி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

தனி நூல்களாகக் கலைமகளைப்பற்றி உள்ளவை கம்பர் பாடிய சரகவதி அந்தாதியும் குமரகுருபர முனிவர் பாடிய சகல கலாவல்லி மாலையும் ஆகும்.

வேறு நூல்கள் இரு ந் த ன வாக த் தெரிய, வில்லே, - -

இந்த இரண்டு நூல்களிலும் சகலகலா வல்லி மாலே பலராலும் படித்துப் பாராட்டப் பெறுகிறது. அதனே இயற்றியவர் குமரகுருபர முனிவர் அவர் சைவராக இருந்தாலும் கலைமகளைப் பாடினர். இந்தி மொழியில் வன்மை பெறுவதற்காக இதைப் பாடிஞர் என்று தெரிகிறது. :

கலைமகளைத் துதிக்கும் நூலாக இருந்தாலும், கவியின் பெருமையையும், உணர்ச்சிமிக்க புலவர் வாயிலாக அது வெளிப்படுவதையும், கவிஞர் களின் இயல்பையும் தெரிவிக்கின்றது. கவிதையைப் பற்றி மேல்நாட்டினர் கூறும் பல இலக்கணங்களே இந்த மாயிைல் காணலாம்.

இந்த நூலின் பாடல்களைக் கட்டுரை வடிவில் எழுதி, குமரகுருபரர் என்ற பத்திரிகைக்கு வழங்க வேண்டுமென்று திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர்களாகிய நீலரு முத்துக்குமாரசுவாமித் தம்பி ரான் சுவாமிகள் பணித்தார்கள். அவ்வாறே எழுதி னேன். அந்தக் கட்டுரைகளேயே தொகுத்து இந்தப் புத்தக வடிவில் வெளியிடுகிறேன். இதன்பின் கலை மகன்துதியாக உள்ள வேறு பாடல்களைச் சேர்த் திருக்கிறேன். * ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/8&oldid=557839" இலிருந்து மீள்விக்கப்பட்டது