பக்கம்:சகுந்தலா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சகுக்தலா கிறைந்துவிட்டது. முதலில் ஏற்பட்ட திகைப்பு ஒடுங்கு வதற்குள்ளாகவே பேருவகை தலே தூக்கியது. இப்படி ஒரு சக்தர்ப்பம் சீக்கிரமே வரும் என எண்ணியவனல்ல அவன். முன் தினம் அடுத்த விட்டுச் சகுக்தலேயின் தயவால் தின் பண்டம் கிடைத்ததும், இனி வரவிருக்கும் இன்சுவை விருந்து களின் சிறு ஆரம்பவிழா அது என்று அவன் மனம் எண்ணி, யது. அதைத் தொடர்ந்து மறுநாளே அவள் வீட்டில் விருங் துண்னும் பாக்கியம் கிட்டியுள்ளதில் திருப்தி ஏற்படுவது இயல்புதானே! ஒானசம்பக்தர் மறுபடியும் தலே நீட்டிக் கூப்பிடுகிற, வரை, சகுராமன் அடுத்த வீட்டு விருந்தைப் பற்றியே எண் கணிக் கொண்டிருந்தான். முதன் முதலில் உணவுப் பொருளே உவந்தளித்த பெருமை அந்த அழகிக்கே சேர்கிறது; அதற். கப்புறம்தானே வீட்டய்யா சாப்பாடுபோட முன்வந்திருக்கி மூர்: ஒருவேளே இதற்குக் கூட அவளே காரணமாக இருந்தா லும் இ நக்கலாம், விட்டில்ே விசேஷம்; யாரையாவது சாப் பிட்ச் சொல்லலாமே, ஏன், பக்கத்து விட்டிலிருப்பவரையே அழைக்கலாமே என்று அவளே கைஸ்ாக ஞாபகப்படுத்தி யிருக்கலாமல்லவா ? என்று கினேத்தான் அவன். "அழகி சகுந்தலேயை நேருக்கு நேர், மிகச் சமீபத்தில் பார்க்கும் சக்தர்ப்பங்கள் நிறையக் கிடைக்கும், அவள் தானே பரிமாறுவாள்! அல்லது அந்த இளிச்சவாய்ப் புள்ளே பரிமாதுமோ என்ன எழவோ' என்ற கினேப்பு மிருந்தது அவன் மனமுலேயிலே. மகிழ்வுடன் மனக் குழப்பமும் ஏற். படாமல் போகவில்லே. ‘அங்கே போனதும் நம்மை மறந்து-இருக்கிற இடத்தை மறந்து-அசட்டுத்தனம்ாக நடக்துகொள்ளக் கூடாது. திருவிழாக் காலத்து மிட்டாய்க் கடையை முழிச்சு முழிச்சுப் பார்க்கிற பட்டிக்காட்டான் மாதிரி ஆகிவிடக் கூடாது' என்றுதான்! வேளே எப்ப வரும் என்று காத்திருந்த சகுராமனுக்கு 'வாங்க மிஸ்டர் ராமன்' என்ற அழைப்பு இனித்தது. விட் டுக் கதவை இழுத்துப் பூட்டிவிட்டு அடுத்த வீட்டிற்குள் துழைந்தான். அவனுக்குப் பரிச்சயமான பட்டாசாலேயைத் தாண்டி அடுத்த கட்டுகளில் கால் வைக்கும்போது அவன் கண்கள் புரண்டன. அங்கும் இங்கும். அழகியைக் காணும் ஆவலினுல்தான். அவள் தென்படவே யில்.இ. அழகி முன் வந்து தன் ごぶ。" எழில் மணிக் கர்த்தால் பரிமாறுவாள் என் எண்ணியரகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/104&oldid=814690" இலிருந்து மீள்விக்கப்பட்டது