பக்கம்:சகுந்தலா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 111 தபால் கிடைத்ததும், அதன் உண்மை நிலேமையை உணர்ந்ததும், ரகுராமனுக்கு வருத்தமும் கோபமும் உண் டாயின. என்னதானிருக்கு என்று பிரித்துக்கூடப் பார்க்க வில்லேயே’ என்ற வருத்தம். இங்கிருந்து ஆனுப்பிய ஸ்டாம்பை அமுக்கி விட்டானே. காசு செலவில்லர்மல் புக் போஸ்டைத் திருப்பிவிட்டான். ஒரு கார்டு கூட எழுத வில்லேயே அயோக்கிய சிகாமணி என்ற கோபம். திரும்பி வந்த எழுத்துப் பிரதியை எடுத்துக்கொண்டு அடுத்த வீடு சேர்ந்தான் ரகு. அப்பொழுது ஞானசம்பக்தர் பட்டாசாலேயில் மேஜை முன் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண் டிருந்தார். ரகுவைக் கண்டதும் வாங்க என்ன விசேஷம் ? என்று வரவேற்ருர். * விஷயத்தைக் கூறி எழுத்துப் பிரதியை அவரிடம் கீட்டி ஞன் அவன். உ.ம். எதிர்பார்த்ததுதானே கடிதம் ஒன் றும் இல்லேயாக்கும் ? என்று கேட்டார் அவர். . . ; ரகு தனது ஊகங்களேயும் வயிற்றெரிச்சலேயும் அறிவித் ததும் ஆமாம். அப்படித் தானிருக்கும். பிரித்துக் கூடப் பார்க்கலியே வெறும் பயல் உமது கடிதம் எவ்வளவு அருமையாக இருந்தது ; அதைப் பார்த்தும்கூட, தபாலேப் பிரிக்காமலே திருப்பி அனுப்பி யிருக்கிருனே, அதிலிருந்தே நன்ருகத் தெரியுதே அவன் அடிமுட்டாள். மகாமடையன் என்பது : இவனெல்லாம் புஸ்தகம் போட வந்திட்டான். அப்புறம் எப்படி தமிழ் நாடு உருப்படும்! நாடு உருப்படாம லிருப்பதிலே ஆச்சர்யமே கிடையாது என்று தீர்ப்புக் கூறிஞர் பெரியவர். - - ரகுவுக்கு ஒரு சந்தேகம் வந்தது, கான் அப்படிக் கடிதம் எழுதினதளுலேதான் அவன் பிரித்துப் பார்க்காமலே திருப்பி விட்டானுே என்னவோ இருக்குமிருக்கும் அகம்பாவமாய்க் காயிதம் எழுதியிருக்கிருன் பாருடா முட்டாள் என்று கி&னத் திருப்பான் அவன். பிஸினஸ் லெட்டர் எப்படி எழுதணும் : அவன் உச்சி குளிர்ந்து போகும்படியாகக் குளிப்பாட்டிக் கடிதம் எழுதுவது எப்படி என்று தெரியாமலே எழுதி னேனே, அது தப்பு தான்' என்று பேசியது அவன் மனம், இந்த எண்ணத்தைப் பெரியவரிடம் சொல்லி அவர் அபிப் பிராயத்தை அறிந்து கொள்ளும் ஆசை அவனுக்கில்லே. இருங்க, தண்ணீர் குடித்துவிட்டு வாறேன் என்று சொல்லி எழுந்து போனுர் அவர். உள்ளே சென்றதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/113&oldid=814700" இலிருந்து மீள்விக்கப்பட்டது