பக்கம்:சகுந்தலா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 6 I 'ஓ' பரவால்லே. உள்ளே வாருமையா, இப்போ உமக்குக் காக செலவில்லாமலே காப்பி கிடைக்கும்படி செப் கிறேன். சும்மா வாருங்க என்று உபசரித்தார். ரகுராமன் காலேத் தேய்த்துத் தேய்த்துத் தயங்குவதைக் கண்டதும் * வாய்யா சும்மா. பிகுப் பண்ணுதே. எனக்கு அது பிடிக் காது. உனக்குக் காபி சப்ளே பண்ணலாம்னு தோணுது. கூப்பிடுறேன், உனக்கும் இஷ்டம்தான். உடனே உள்ளே வரவேண்டியதுதானே. ஏன் வேஷம் போடணும்? அதுதான் நான் சொல்றது. பொய்மை, போலித்தனம், பாசாங்கு, வேஷம், வீண் வெளிச்சம் எதுவுமே கூடாது. கட் அன் ரைட் . வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு, அவ்வளவுதான். உ.ம். வாங்க உள்ளே! என்று அழைத்து விட்டு முன் சென்ருர் ஞானசம்பந்தம். ரகுராமனும் போன்ை, இந்த ஆசாமியின் போக்கே ஒரு தினுசாகத் தானிருக்கு ' என்று கினேத்த அவன் அபிப் பிராயத்தை அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் உறுதிப்படுத்தின. - -

  • மிஸ்டர் ரகுநாதன் என்று ஆரம்பித்தார் அவர். ‘ என் பெயர் அப்படியல்ல :' என நினைவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது மறுபடியும்.

பார்த்தீர்களா, என்னே அறியாமலே தவறு ஏற்பட்டு விடுகிறது. அது போகுது. நான் முதலிலேயே உங்களிடம் சொல்லிவிட விரும்புகிறேன். நான் யாருடனுவது பேசிப் பழகத் தொடங்கும் போதெல்லாம் . இதைச் சொல்லத் தவறுவது கிடையாது. பழகுகிற புதுகிலே நீங்க வாங்க என்கிற மாதிரித்தான் பேசுவது வழக்கம். அப்புறம் நீர், நீ என்று கூடத் தாரளமாகப் பேச்சு வந்துவிடும். இதை நான் வேண்டுமென்றே கையாள்வதில்லை. என் சுபாவமே அதுவாகப் போச்சு. அதனுலே நான் உம்மை எப்படி அழைக் கிறேன் என்பதைப் பற்றிக் கவலேப் படக்கூடாது. س؛ * நம்மை இவன் மரியாதையில்லாமல் நீர், நீ என்றெல்லாம் சுொல்கிருனே என்று வருத்தப்படக் கூடாது. மரியாதை என்பது இதய பூர்வமாக உள்ளத்து உணர்ச்சியோடு ஒன்றி யிருக்க வேண்டிய விஷயம். சும்மா வெளிப் பேச்சுக்கு நீங்க, பூநீ ரகுராமன் அவர்கள் என்றெல்லாம் சொல்றது ; மனசுக் குள்ளே கிடக்கான் சின்னப் பயல் என்கிற மாதிரி கினேப்பது -இதுதான் மரியாதை என்ருல் அதிலே அர்த்தமே. கிடையாது. சரி ; உட்கார்ந்திருங்க, உள்ளே போப் காப்பிக்குச் சொல்லி விட்டு வரறேன் என்று போளுர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/63&oldid=814817" இலிருந்து மீள்விக்கப்பட்டது