உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் 11:

பிசிராங்தையார் கோப்பெருஞ்சோழனது பெருமை சான்ற வாழ்வினே உள்ளும் போதும் நம் நெஞ்சம் உலகப்பெரு ஞானியாரான பிளேட்டோவின்பால் செல்கின்றது. ஒர் ஆடவனுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் சாதாரணமானது; இயற்கையானதுங்கூட. ஆனால், ஒர் ஆடவனுக்கும் இன்னுமோர் ஆடவனுக்கும் இடையே ஏற்படும் உண்மையான உயிர் நட்போ, எல்லேயற்றது ; என்றும் அழியாதது, என்பது அவர் அமுத வாக்கு. ஆம். உயர்ந்த நட்பின் இலக்கணத்தைத்தான் கண் டார் கிரேக்க ஞானியார். ஆனால், நம் அருமைத் தமிழ கமோ, அவ்விலக்கணத்தை வாழ்விக்கும் இலக்கியத் தையே-சான்ருேர்களின் நல்வாழ்க்கையையே-கண்டு களித்தது!

இவ்வாறு சங்ககாலத் தமிழகத்தின் உள்ளத்தைத் தொட்டு உணர்வினேப் பெருக்கும் ஒரு பெருவாழ்க்கை வாழ்ந்த இரு பெருஞ்சான்ருேர்களாகிய பிசிராங்தையார், கோப்பெருஞ்சோழன் ஆகியோரின் பெருமை மிக்க பீடு கிறைந்த வாழ்க்கை ஒர் இலக்கியம் ; பேரிலக்கியம்; பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பே போல நவில் தொறும் நயம் நிறைந்து விளங்கும் கல்லிலக்கியம். அவர் கள் வாழ்வும் இலக்கியம்; வாக்கும் இலக்கியம். தமிழ் இலக்கிய வானில் ஒளி பரப்பி இருளகற்றும் இருபெருஞ் சுடர்களாய்த் திகழும் அவர்கள் நல்வாழ்வை கினேப்பார் நெஞ்சம் நூலாகும்; கருதுவார் வாழ்க்கை காவியமாகும்; வாழ்வார் வரலாறு வான்மறையாகும்.

1. ‘The love of man to woman is a thing common and of QÖü f$8............... but true friendship between man and man is infinite and immortal, '-Plato.