பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் iš

பவும்,ஆட்டுக்கடாயை வெட்டி வீழ்த்தவும், ஒய்தலில்லாத கொழுவிய துவையலையும், ஊனுடைய புலவுச்சோற்றை யும் விரும்பியவாறெல்லாம் வழங்கும் மிக்க செல்வம் பெற்று முதிர்ந்து எம்முடன் முன்பு நட்புச் செய்த பறம்பு மலையே, இப்போது எங்கள் பாரி இறந்தாகைக் கலங் கிச் செயலற்றுக் கண்ணிர் வெள்ளம் பெருக்கெடுத் தோடும் கண்களோடு கின்னேக் கையாரத் தொழுது வாயார வாழ்த்திச் செல்கின்ருேம். பெ ரும் புக ழ் ப் பறம்பே............ குறிய வளேயணிந்த பாரி மகளிரின் மனம் கமழும் நறிய கூந்தலைத் தீண்டுதற்குரிய மன வாளரை கினேந்து நாங்கள் செல்வோம் ஆயினுேம், என் ஆணும் கருத்தமைய,

ஈண்டுநின் ருேர்க்கும் தோன்றுஞ் சிறுவரை சென்று நின் ருேர்க்கும் தோன்றும் மன்ற களிறுமென் றிட்ட கவளம் போல நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல் வாரசும் பொழுகு முன்றில் தேர்வி சிருக்கை நெடியோன் குன்றே. * (புறம் 114) மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும் அட்டான்(று) ஆனுக் கொழுந்துவை யூன்சோறும் பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி நட்டன மன்னுே முன்னே ; இனியே, பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று நீர்வார் கண்ணேம் தொழுதுதிற் பழிச்சிச் சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே ! கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர் - நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே. ' (புறம். 113) இவ்வாறு தாயற்ற சேய்போல அழுது துடித்துப் பாரி மகளிரோடு காலும் மனனும் கலங்கித் தடுமாற, உயிரற்ற கூடாய்க் கபிலர் பெருமானர் பறம்பின் எல்லை இகந்து