பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சங்ககாலச் சான்ருேக்கள்

கபிலர் பெருமானுர், அங்கும் அண்ணல் பாரியின் அழி யாப் புகழை ஆர்வத்துடன் பாராட்ட மறந்தாரில்லே. “சோலர் பெருமானே, பசும்புண் பட்ட வாய்போல வெடித் திருக்கும் பலாவினின்றும் வார்ந்து ஒழுகும் மதுவினே அள்ளிச் செல்லும் வாடைக் காற்று ஓடி வழங்கும் பறம்பு காட்டின் பெருவிறல் தலைவன்-சித்திரச்செய்கை போன்ற வித்தகத் தொழில் புனேக்த நல்ல மனேயின்கண் வாழும் பாவை கல்லாள் கணவன்-பொன் போலப் பூத்த சிறி வில்ப் புன்கால் உன்னத்தின் பகைவன் - புலர்ந்த சாக்தும் புலசாக ஈகையுமுடையோன்-மலர்ந்த மார் புடை மாவண் பாரி-எங்கள் தலைவன். அவன் பரிசிலர் முழவு மண் காய்க்தொழிய, இரவலர் கண்ணிர் இழிந் தோட, மீளா உலகிற்குச் சென்றுவிட்டான். அதனுல், கான் கின்னிடம் கையேந்தி இரக்க வந்தேனில்லை : கின் புகழைக் குறைத்தோ மிகுத்தோ கூறேன். கொடுத் தற்கு வருந்த நெஞ்சும், ஒரு சிறிதும் முனேப்பற்ற உள் ளம் காரணமாக வாரி வழங்கும் போதும் களிவெறி கொள்ளப் பண்பும், நீ கொடுக்குந்தோறும் மாவள்ளியன் என மன்பதை போற்றும் புகழ் ஒலியும் கின் பால் அமைக் திருத்தலின், உன்னிடம் வந்தேன்,' எனப் புலாஅம் பாசறைத் தலைவனுகிய செல்வக் கடுங்கோவின் சிறப் பினே விதந்தோதி வாழ்த்தினர். வயங்கு செங்காவின’ ராகிய கபிலர் பெருமான் திருவாயால் புகழ் பெற்ற செல் வக் கடுங்கோ வாழியாதன், சிங்தை குளிர்ந்து, செந்தமிழ்ச் சான்ருேரைத் தலையுற வணங்கி, சிறப்பெலாம் செய்து 'சிறுபுறம் என்று கூறி, துருயிரம் காணம் கொடுத்து, நன்ருவென்னும் குன்றேறி கின்று, நற்றமிழ்ப் பெரியார்க் குத் தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் கொடுத்தான். என்னே கபிலரின் மாட்சி! என்னே அக்கோவேந்தன் குணச் சிறப்பு ! .

1. பதிற்றுப்பத்து, 61.