பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 23

அப்புலவர் பெருந்தகையின் கருணைஉள்ளமும் பொதுநல உணர்வும் நமக்குப் புலனுகின்றன அல்லவோ? இவ்வாறு எவ்வுயிரும் இன்புற்றிருக்கவே துடித்தது அச்சான்குே ரின் தமிழ் நெஞ்சம். இஃதன்றித் தன்னலம் சிறிதும் காணு அத்தகைசால் உள்ளத்தின் பெற்றியினே எவரே அளந்து போற்ற வல்லார் !

பேகனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பின் பிரிந்த கண்ணகி யின் நிலை குறித்தே இவ்வாறெல்லாம் கவன்ற அச்சான் ருேளின் கருணை இதயம், தம் ஆருயிர்த் தோழனுடைய இரு கண்மணிகள் அனேய செல்வியரின் ஆதரவற்ற கிலே குறித்து எவ்வாறெல்லாம் கலங்கியதோ! தாம் நம்பிக் சென்று தம் செங்காவால் பாடிய இருங்கோவேளும் விச் சிக்கோவும் தம் நெஞ்சு புண்ணுகச் செய்த நிலைமை மீண் டும் மீண்டும் அவர் கினேவிற்கு வந்து அவரை வாட்டியது. அப்போதெல்லாம் அவர், தோல்வி துலேயல்லார்கண் னும் கொளலே சால்பிற்குக் கட்டளே போலும் ' என கினேந்து, தம் மனத்தைத் தாமே ஆற்றிக்கொண்டார். எனினும், பாரி மகளிர் கினைவே அவரைப் பெரிதும் அலேத்தது. வள்ளல் பாரியே, எவ்வாறு என் பணி ஆற்றுவேன்? எவ்வாறு உன் ஆவி குளிரச்செய்வேன்? என்று எண்ணி எண்ணி மனம் நைந்தார். பாரியைக் காணவே இக்கண்கள்; அவன் புகழ் பாடவே இக்கா; அவன் குடிகொள்ளவே இவ்விதயம்; அவனுடன் பழகி இன்புறவே இவ்வாழ்வு, என்றெல்லாம் தம்மைப்பற் றியே எண்ணிலடங்கா இன்பக் கனவுகள் கண்டு இறுமாக் திருந்தவர் கபிலர்.

ஆனல், என் செய்வார்! தம் ஆருயிர்த் தோழனுக்கு ஆற்ற வேண்டிய நட்புக் கடனுக்காக மனந்தேறிச்சேரலர் கோவைச் செந்தமிழ்க் கவிகளால் அணி செய்ய மனங் கொண்டார். அவனுழைச் சென்ற அருந்தமிழ்ப் புலவர்