பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 羲囊

டம் போகக் காணில், பகைவர் தம் மதில் வாயில் உள்ள பழைய கதவங்களேயும், கணைய மரங்களேயும் மாற்றிப் புதியன இடுவர்; மாற்ருர் சேனை வீரர் பிணம் சிதறி யழியப் போர்க் களத்தை உழக்கிச் செல்லுதலால் குருதிக்கறை படிந்த கின் குதிரைக் கூட்டம் போகக்கண் டால், கின் பகைவர் காட்டு வாயில்களேயும் வேலமுள். ளால் அடைத்துக் காப்பர் : பகைவர் மார்பைத் தைத்து ஊடுருவிப்போன உறையின்கண் செறித்தலில்லாத கின் வேலைக் கண்ட பகைவர், தம் கிடுகைக் காப்புடனே கைநீட்டுச் செறிப்பர் ; வாள் வாய்க்கத் தைத்த வடுப் படிந்த கின் மைந்துடை வீரரைக் கண்டால், குருதி படிந்த அம்பைத் துணியுள் அடக்குவர். ஆல்ை, நீயோ, காவ லாக வெண்சிறு கடுகைப் புகைக்கவும் மனம் தரியாது, மாற்ருரின் உயிரைக் கொடுபோகும் கூற்றம் ஒப்பாய். ஆகலின், அதிகமானே, கெற்கதிர் சுழலும் கழனியொடு பெரும்புனல் வளமிக்க கின் பகைவரின் அகல் காடு இரங்கிக் கெட்டு ஒழிவதோ!' என எண்ணி மனம் உருகினர்.

ஒளவையாரின் எண்ணம் கிறைவேறிவிட்டது. அதிகனது அஞ்சா மழவர் படை, ஆர்த்தெழுந்து காரி யின் கடியரண்களேயும் கடும்படையையும் கலக்கழியச் செய்தது. அரிமா அன்ன அதிகன் தலைமையில் வசிப் புலிகளெனப் பாய்ந்த மழவர் சேனேக்கு ஆற்ருது மான் கூட்டமாயின மலேயமான் படைகள். அதிகமான் விர முரசு கொட்டி, வாகை சூடி, வெற்றிக்கொடியை விண் னுயரப் பிடித்தான் ; அதனோடும் அமைந்தானில்லே அவன் ; மலேயமான் காரியின் கோவலூருக்குள் நுழைந்து அந்நகரையும் பாழாக்கினன், பொலிவு மிக்க அன் o யோன், தலைநகரைப் பொலிவிழந்ததாக்கினன். இவ்வாறு அவன் மூவேந்தருக்கும் மொய்ம்பாய் கின்ற கோவ