பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சங்ககாலச் சான்ருேக்கள்

லுாரானே வென்ற திறம் புலவர் பாடுதற்கும் அரியதாய் விளங்கியது. முன்னர் ஒரு முறை மூண்டெழுந்த போரில் அதிகமான் அவன் முன்னேர் போல இரும்பனம் புடையலும், கை வான் கழலும், பூவார் காவும்: புனிற்றுப்புலால் நெடுவேலும், எழுபொறி நாட்டத்து எ அ க் த ய மும் வழுவின்றிப் பெற்றிருந்தும், அமையாது செருவேட்டு, இமிழ் குரல் முரசார்த்து வந்த எழுவரோடும் முரணி, அவரை முறியடித்து வெற்றி கொண்ட பெருக்திறலும், அஞ்சொல் துண் தேர்ச்சிப் புலவர் அழகுறப்பாடுவதற்கு அரிதாகவே விளங்கியது. அதிகமான் அன்று எழுவரை வென்று பெற்ற வெற்றி வினேப் போலவே படை வலி சான்ற கோவலூரை எறிந்த அவன் அரிய திறத்தை நா வன்மை மிக்க பரணரே பாடி யுள்ளார். ஆதலின்,

செருவேட்(டு) இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச் சென்(று) அமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க்(கு) அசியை ; இன்றும் பரணன் பாடினன் மன்கொல் மற்றுநீ முரண்மிகு கோவலூர் நூறிநின் அரண் அடு திகிரி யேந்திய தோளே . (புறம், 99) என இவ்வாறு கோவலூர் எறிந்தானே ஒளவையார் போற்றினர்.

இங்கனம் தன் வாழ்வில் இரு பெரு வெற்றிகளேப் பெற்றுப் புகழொடு விளங்கிய அதியர் கோமானது அரசி யல் வானில் மீண்டும் போர் மேகங்கள் சூழலாயின. ஆல்ை, ஒளவையாரின் அருந்திறத்தால், அப்போர் மேகங்களின் நெருப்பு மழையினின்றும் தமிழகம் தப்பி யது. அதிகமான் நாளில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டைச் சோழர் மரபினனுகிய