பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 49

வரை தம் ஐயன் அதிகமான் புகழ் சுடர் விட்டு ஒளிரு மாறு செய்தார்.

அதிகமான் தன் வாழ்வில் அருளேயும் ஆண்மையை யும் இரு கண்களெனவே போற்றுவதைக் கண்ட அருங் தமிழ்ப் பிராட்டியார் அளவிலா மகிழ்வு கொண்டார். எல்லாவற்றினும் மேலாக, இகல் வேந்தர் கண்டு நடுங்கும் மாறுபாடு மிக உடையவகைக் கலைஞர்களுக்கு எளிவந்த அவனது கிலேயை எண்ணி, ஊரின்கண் உள்ள சிறுவர் தன் வெள்ளிய மருப்புக்களேக் கழுவி மகிழுங்கால் நீர்த் துறையின்கண் படியும் பெருங்களிறு அவர்க்கு எத்துணை எளியதாய்-இன்பம் த ரு வ த ய் - உள் ள து! அது போன்று அதிகமான் எமக்கு உள்ளான். ஆனால், அப் பெருங்களிற்றின் நெருங்குதற்கரிய மதம்பட்ட கிலேபோல அவன் தன் ஒன்னர்க்கு உள்ளான் என்று மனமாாப் போற்றினர். மேலும், அவன் சான்ருேர் நடுவண் குழந்தை போல விளங்குவதையும், பகைவர் நடுவண் பைங்காகம் போலச் சீறிச் செல்வதையும் எண்ணி, எம் அதிகமான், வீட்டின் இறைப்பில் செருகிய தீக்கடை கோல்போலத் தன் வலி தோற்ருது அடங்கியும் இருப் பன்; அடையார் முன்போ, அத்திக்கடைகோல் கக்கும் காட்டுத் திப்போலத் தோன்றவும் செய்வன்!” எனக்கூறி இறும்பூது கொண்டார்.

இவ்வாறு ஆர்கலி நறவின் அதியர் கோமானது, அரும்பெறற்பண்புகளே எல்லாம் உளமாரப் பாராட்டிய ஒளவையார், இல்லோர் ஒக்கல் தலைவய்ை-புலரா ஈகைப் பெரியோய்ை-அவன் திகழும் பெருமிதக் காட்சியையும் போற்றல் ஆயினர். " ஆர்வலர் அணுகின் அல்லது கூர் வேல் காவலர் கனவிலும் அணுக முடியாத காப் புடைப் பெருநகர் அவனுடையது. அக்ககளில் மஞ்சு தோய் மலைகளென கிறைந்து விளங்கும் வான் தோய்

4