பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார்

51


யரையும் பாணரையும் அவன்பால் ஆற்றுப்படுத்தும் அளவிற்குப் பசிப்பிணி மருத்துவனாய் விளங்கினான்.

இத்தகைய தலை சிறந்த வள்ளியோன் வீரத்தின் பெருமையையும் நாம் நன்கு அறிவோமல்லமோ? எழுவரொடு முரணி அவன் போர் புரிந்து கண்ட வெற்றியும் கோவலூரை நூறி அவன் கொண்ட கொற்றமும் என் றென்றும் அவன் புகழ் பேசுவன அல்லவோ? அத்த கைய போர் அடு திருவினனாகிய பொலந்தார் அஞ்சியின் இணையற்ற விரத்தை எத்தனேயோ அருந்தமிழ்க் கவிதையால் பெருமிதம் தோன்றப் புகழ்ந்துள்ளார் ஒளவையார். அவற்றுள் எல்லாம் தலே சிறந்தது ஒன்று. அதிகன் வாழ்வில் கடந்த உண்மை கிகழ்ச்சி ஒன்றை அதன்கண் அவர் சொல்லோவியமாக்கிக் காட்டும் திறன் என்றென் ஆறும் நம் கருத்தை விட்டு அகலா வண்ணம் நிலை பெற்று விளங்குகிறது.

போர்க்களத்தில் கடும் போர் புரிந்துகொண்டிருந்தான் அதிகமான். அவ்வமயம் அவனுக்குத் தவமகன் பிறந்தான். வெற்றியுடன் போர் புரியும் வேளையில் இச்செய்தி அவனுக்கு எட்டியது. தன் குல விளக்காய்த் தோன்றிய தவமகன் திருமுகத்தைப் போய்க் காண அவன் கால்கள் விரைந்தன. அவன் தன் போர்க்கோலத்தையும் களைந்தானில்லை. கையிலே வேல்; காலிலே வீரக்கழல் ; உடம்பிலே வியர்வை; கழுத்தில் அம்புகள் பாய்ந்த சரம் புலராப் பசும்புண்கள்-இத்தோற்றத்தோடு தன் தவமகனை-செல்வக் களஞ்சியத்தைப் போய்க்கண்டான். ஆனால், அந்நிலையிலும்-மாலை மதிய மனைய பால் ஒழுகும் மைந்தன் முகங்கண்ட நேரத்திலும்- பனந்தோட்டையும் வெட்சி மலரையும் வேங்கைப் பூவுடனே கலந்து தொடுத்து உச்சியில் சூடி ஒன்னுரை வெகுண்டுபார்த்த கண்கள் தம் சிவப்பு மாறிவில்லை. இக்