பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார்

53


நாட்டையும் வாழ்வையும் பாழாக்க, கரவுடை அசவுபோல அற்றம் நோக்கியிருந்தான் மலையமான். தன் நாடும் நகரமும் அழிந்து சுடுகாடான காட்சி அவன் நெஞ்சில் நெருப்பாய்க் கனன்றுகொண்டிருந்தது. இயற்கையும் காலமெனும் கடுங்காற்றுக்கொண்டு அந்நெருப்பை ஊதித் தன் காரியத்தைச் சாதித்துக்கொண்டது.

மலையமான் எவ்வாறேனும் அதிகமானை வென்று தன் நாட்டையும் நகரையும் பெறக்கருதிச் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைத் தனக்குத் துணை நிற்க வேண்டினான். அவனும் அதற்கு ஒருப்பட்டுக் கடை யெழு வள்ளல்களுள் ஒருவனாய் விளங்கிய வல்வில் ஒரியின் 'பயங்கெழு கொல்வியினை' முதற்கண் பொறாது கொள்ள எண்ணங்கொண்டான். மலையமானும் அதற்கு இசைந்து கொல்லி மலையை முற்றுகையிட்டான். அச்செய்தியறிந்த 'குறும்பொறை நன்னாடு கோடியர்க்’கீந்து குன்றாப் புகழ்படைத்திருந்த ஓங்கிருங்கொல்லிப் பொருநன்’ தன் ஒரிக்குதிரைமீதேறிப் போர்க்களம் நோக்கிப் பாய்க்தான். சேரன் துணைக்கொண்டு வந்த 'ஒள்வாள் மலையன்' படையும், வல்வில் ஒரிதன் தாயும் ஒன்றோடொன்று மோதின. குருதி வெள்ளம் ஆறாய்ப் பெருகிற்று. காரிக் குதிரைக் காரியொடு ஒரிக்குதிரை ஒரி இடியொடு இடி தாக்கினாலென மோதி மலைந்து காலனும் அஞ்சக் கடும் போர் உடற்றினான். கொல்லிக் கூற்றத்தின் தலைவன் உயிரைத் துரும்பென மதித்துத் தன் கண்ணான காட்டைக் காக்க மாற்றார் படை கலக்கி-மனம் கலக்கிப் போர் புரிந்தான். ஆனால், அந்தோ ! அவன் ஈர நெஞ்சில் கூர்வேலொன்று ஆழப் பாய்ந்து அவன் இன்னுயிர் குடித்தது. சாய்ந்தான் ஒரி. அவன் காடும் மலையும் அவலமுற்றன ; கூத்தரும் பாணரும் குமுறி அழுதனர். கொல்லிக் கூற்றம் பெருஞ்சேரல் இரும்பொறையின்