பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

சங்ககாலச் சான்றோர்கள்


சீற்றத்துக்கு இரையாயிற்று.

"முள்ளுர் மன்னன் கழல்தொடிக் காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஒரிக் கொன்று சேரலர்க் கீத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி[1]"

(அகம். 209)

என வரும் நெடுந்தொகை அடிகளும் பிற சங்கப்பாடல்களும் இவ்வரலாற்றுச் செய்தியை வலியுறுத்தும்.

மலையமான் ஒரியைக் கொன்று அவன் ஊரைப் பாழாக்கினான். ஆயினும், அவன் உள்ளம் அமைதி அடையவில்லை. தன்னே வென்று தன் தலை நகரையும் அழித்தவனே அழிக்கவே அவன் உள்ளம் விரும்பியது. "ஒங்கிருங்கொல்லி"யை அதன் தலைவனைக்கொன்று பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் காணிக்கையாக்கி அவன் உள்ளம் உவக்கச் செய்தான் காரி. தான் பெற்ற காணிக்கையால் புகழ் வெறியும் போர் வெறியும் கொண்டான் சேரன்; தன்னை மகிழ்வித்த மலையமான் மனம் குளிரத் தகடுரை அழிக்கத் துணிந்தான். சேரனுடன் காரி வஞ்சம் தீர்க்கச் சீறி வரும் செய்தி அறிந்தான் அதியமான்; தன் நட்பிற்குரிய இருபெருவேந்தரையும் துணைக்கு அழைத்தான்; 'அரவக்கடல் தானே அதிகன்' வேண்டு கோட்கிசைந்த அவர்கள் பெரும்படை திரட்டி வரும் வரையில் தன் தலை நகராம் தகடுரிலேயே அரணடைத்து உள்ளிருந்தான். அவன் மழவர் படை கடியரண்களைக் காத்துகின்றது. சேரன் படையும், மலையமான் படையும் வேல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் வில் பயில் தகடுரை முற்றுகையிட்டன. அதிகமானே, அவர்மேல் சென்று தன் அருமந்த காட்டைக் காக்கும் வழி கருதி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவனாய் வாளா விருந்தான். அதிகர் கோமான் வாளாவிருத்தல் கண்டு,

  1. 1, அகம். 208, நற்றின, 320.