பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார்

55


ஒளவையார் அவன் நெஞ்சில் கனன்றெரியும் ஆண்மைக் தீப்பொங்கி எரியும் வண்ணம் விர மொழிகள் பல புகன்றார் : 'வெண் காந்தள் பூவும் காட்டு மல்லிகையும் மணம் பரப்பும் மலேச்சாரலில் வாழும் மறப்புலி சிறினால் அதை எதிர்க்கும் மான் கூட்டமும் உளதோ ? காய்கதிர்ச் செல்வன் கதிரொளி பரப்பக் கண்டால், கனையிறாளும் எதிர் நிற்குமோ ? பாரமிகுதியால் வண்டியின் பார் அச்சொடு பொருந்தி நிலத்தின்கண் சகடம் பதியினும், மணல் பரக்கவும் கற்பிளக்கவும் இழுத்துச் செல்லும் பெருமிதப் பகட்டிற்குத் துறையுமுண்டோ? கணைய மரமொத்த முழந்தாளளவு தோயும் கைகளையுடையவனே, மழவர் பெரும, நீ போர்க்களம் புகுந்தால் உன் மண்ணகத்தைக் கைக் கொண்டு ஆர்க்கும் வீரர்களும் உண்டோ?[1] என்று வீரமுழக்கம் செய்தார்.

ஒளவையாரின் வீரமுழக்கம் கேட்ட அதிகமான் கோபத்தி இரு கண்களிலும் பொறி பறக்க அரிமா எனப் பாய்ந்தான். அவனுடன் இருபெரு வேந்தரும் தம் கால் வகைப் படையுடன் கலந்துகொண்டனர். இருபுற வீரரும் ஒருவரை ஒருவர் சாடினார். நானிலமே நடுங்கப் பெரும்போர் மூண்டது. மலேயன் அவனே எதிர்த்து நின்ற அதிகன் ஆகிய இருபெரு வேந்தர் படையும் கடலை எதிர்க்கும் கடலென நின்று ஆரவாரித்தன. இரு புற மன்னரும் விரப்போர் நிகழ்த்தினர். யானைகளும், குதிரைகளும் மலை மலையாய் வெட்டுண்டு வீழ்ந்தன. வாள் வீரரும் வேல் வீரரும் விழுப்புண் தாங்கிச் சாய்ந்தனர். களிறுகளின் பிளிறலும், பரிகளின் சாவொலியும், வீரர்களின் அரற்றலும் கடலொலியையும் மீக்கூர்வவாயின. வையகம் காணாக் கடும்போர் நடந்தது.

தன்னே ஒத்த ஓரியைக் கொன்ற மலையமான்

  1. 1. புறம் 90