பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. பெருந்தலைச் சாத்தனர்

மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக் கருங்கயற்கண் விழித்தொல்கி நடக்கும் காவிரித்தாயின் கருணே வளம் கொழிக்கும் சோழகன் ட்ைடிலுள்ள பழமை பொருந்திய ஊர்களுள் ஒன்று ஆவூர். அவ்வூரின் கண் மூலங்கிழார் என்ற பெயர் படைத்த சங்கச் சான்ருேர் ஒருவர் இசைபட வாழ்ந்திருந்தார். தமிழகம் எங்கனும் புகழ் பரப்பி வாழ்ந்திருந்த ஆவூர் மூலங்கிழாருக்கு அருந்தவப் பயனுய்த் தோன்றினர் ஒர் அருந்தமிழ்ச் சான்றேர். தவமிருந்து பெற்ற குழந் தைக்குத் தண்டமிழ்ப் புலவராகிய மூலங்கிழார் தம் குல தெய்வத்தின் பெயராகிய சாத்தனுர் என்பதையே சூட்டி ர்ை. சாத்தனர் மழலே மிழற்றும் குழந்தைப்பருவத்தராய் இருந்த நாளிலேயே அவர் தலே சற்றே பெரிதாய் விளங் கியது. அது கண்ட பெற்ருேரும் மற்ருேரும் பெருக் தலைச் சாத்தன்' என்றே அன்யூற அவரை வழங்கலா யினர். நூலறிவோடு நுண்ணறிவும் ப ைட த் த கல் லறிஞர் பலரும் முழுநிலவனேய சாத்தனரின் திரு முகத்தை உற்று நோக்கி உளமிகப் பூரித்துச் சாத்தன் உண்மையிலேயே பெருந்தலைச் சாத்தனுய்த்-தமிழகம் போற்றும் சான்ருேளுய்த் திகழ்வான். எனக் கூறி இன்புற்றனர். தாம் பெற்ற மகவை நாட்டவரெல்லாரும் போற்றி மகிழ்வது கண்டு சன்ற ஞான்றினும் பெரிது உவந்தனர் பெற்ருே.ர். -

இவ்வாறு பிறந்த நாள் தொட்டுப் பெற்றேர்க்கும் உற்ருேர்க்கும் பெருமகிழ்வூட்டி வந்த சாத்தனர், இமிழ்