பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சங்ககாலச் சான்ருேர்கள்

கடல் சூழ்ந்த தமிழகம் முழுவதற்குமே இன்பம் வழங்க விழைவார்போலக் குடதிசைத் தோன்றிய குளிர்மதி என நாளும் புதுப்புதுப் பொலிவுடன் வளர்ந்து வரலாயினர். ஆண்டுகள் பல கழிந்தன. "தந்தையறிவு மகனறிவு என்ற மணி மொழிக்கு ஒப்பப் பெரும்புலவரானுர் சாத்தனர்; பழுத்த தமிழ்ப் புல மைக்கும் ஒழுக்கம் கிறைந்த வாழ்விற் கும் உறைவிடமாய் விளங்கினர்.

காளப்பருவம் எய்திய சாத்தனரின் கலை உணர்விற் கும், புலமை சான்ற வாழ்க்கைக்கும் ஏற்ற பொற்புடை நல்லார் ஒருவர் அவர்க்கு வாழ்க்கைத்துணவியராய் அமைந்தார். அவ்வன்னே யாரோ, புலவர் பெருமானரது கருத்தறிந்து நடக்கும் காதல் நெஞ்சினராய், தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற்காக்கும் சோர்விலா நலத்தினராய்த் திகழ்ந்தார். மனேத்தக்க மாண்புடையராய்த் திகழ்ந்த அவருடன் மங்கலம் நிறைந்த இல்வாழ்க்கை நடத்திய சாத்தனர். நன்கலமான நன் மக்கட்பேற்றினேப் பெற்ருள். குழலினும் யாழினு மினிய மழலே பேசியும், சிறு கை நீட்டிக் கலத்திடை உள்ள அடிசில அளாவி அமிழ்தம் ஆக்கியும் சின்னஞ் சிறு குழந்தைகள் செய்த சிறுகுறும்பெல்லாம் புலவர் வாழ்க்கையைப் புத்தேளிர் உலக வாழ்வினும் இன்பம் நிறைந்ததாய் விளங்கச் செய்தது. இவ்வாறு இன்புற் றிருந்த புலவர் பெருமாளுர் வாழ்க்கையை கிரயமனைய வறுமைத்தித் தீண்டிற்று. வெந்தழலிற்பட்ட பூங்கொடி போலப் புலவரின் குடும்பம் சோர்ந்து தளர்ந்து துன் புறல் ஆயிற்று. கலைக்கடல் கடந்தும் கலிக்கடலேக் கடக்க ஒண்ணுப் புலவரின் நெஞ்சம் கலங்கியது. இன்மை என ஒரு பாவி புலவரின்-அவர் குடும்பத்தின்-துன்பக் கண்ணிரைத் திறையாகக் கொண்டான். புலவரின் குடும்பம் துயரத்தியில் வெந்து துடித்தது. நன்மனேக்குத்