பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சங்ககாலச் சான்ருேர்கள்

னிர் பொழியும் கண்களோடு மனங்குமுறினர் பெற்ற தாயார். காணப்பொருத இக்கடுந் துயரக் காட்சியைக் கண்ட புலவர் நெஞ்சம் எரியிடைப்பட்ட இழுது என உருகியது. அவர் கலங்கினர்; கசிந்தார்; உள்ளம் துடித் தார்; என் துயர் களேய வல்ல சான்ருேர் எவரும் இல்லையோ? " என்று ஏங்கினர். -

இருவே(து) உலகத்(து) இயற்கை; திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு." (குறள், 374) என்ற வள்ளுவர் வாய்மொழிக்குச் சாத்தனர் வாழ்க்கை யும் விதி விலக்காகவில்லை,

இக்கிலேயில் வாடிய அவர் செவிகட்குப் பயிர் கண்ட வான்மழையே போல ஒரு செய்தி கிடைத்தது. முதிர மலேக் கிழவன் புலவர் போற்றும் புரவலர் தலேவன் ; முதிர்ந்த அன்பும் அறிவும் மிக உடையவன்; பசிப்பிணிப் பகைவன்; அடையா நெடுங்கதவினன்; அருள் கிறைந்த முகத்தினன்; புலவர்க்குப் பொன்னும் .ெ பா. ரு ளு ம் வரையாது ஈயும் வள்ளியோன் ; அவனிடம் சென்ரு ரை வாழ்நாள் முற்றும் வறுமைத்தி அண்டாது, என்ற செய்தி சாத்தனுர் செவிகட்கு அமிழ்தம் ஆயிற்று. அத் துடன் பெருஞ்சித்திரனுர் என்ற பெ ரு ஞ் சா ன் ருே ர் பாடும் புகழ் படைத்தவனும் அவனே ; அவர் வாழ்வைக் கவ்விய வறுமையெல்லாம் களேந்து வளமை பொங்கச் செய்தவனும் அவனே, என்பதிைக் கேள்வியுற்றர்; வரம்பிலா மகிழ்வு கொண்டார். பழுமரந்தேடும் பறவை போல-முந்நீர்ப் பவ்வம் நோக்கிப் பாய்ந்தோடும் வான் மலே அருவியும் பேராறும் போலச்-சாத்தனர் திருந்து வேற் குமணன் இருந்து அருள் புரியும் திக்கு நோக்கிச் செல்ல உளங்கொண்டார்.

பண்டைத் தமிழகத்தில் பசித்தார் துன்பம் போக்கித் தண்ணளி புரியும் தகைசால் சுடர் விளக்குகளாய்த்