பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தனுர் 83

கல்லும் முள்ளும் கிறைந்த அருவழியெல்லாம் கடந்து சென்று அருட்கோமானேக் கண்டனர் இருவரும். தன் எதிரில் காணி கின்ற இளங்குமணனேக் குழந்தைபோல வியந்து நோக்கினன் குமணன். ஒளி விசும் கண்களுடன் கின்ற புலவர் பெருமாளுர், உவகை பொங்கும் நெஞ்சுடன் ஈரான்மொழி பல புகன்று இருவரையும் இன்புறச் செய் தார்; அதன் பின் குமண வள்ளலே நோக்கி, கல்லிசைத் தோன்றலே, இனி நாடாளும் பொறுப்பை நீயே ஏற்க வேண்டும், என்ருர். அரசாளும் பெருந்துன்பத்தினின் ஆறும் நீங்கி இயற்கைச் சூழலின் இனிமையில் மூழ்கியிருந்த குமண வள்ளலோ, சற்றே தயங்கினன். ஆணுல், என் செய்வான் ! அவன் தலையும் அவன் உடைமை அன்றே. அது புலவர் பெருமானது உரிமையன்ருே அதற்கு மணி முடி புனேய அவர் விரும்பின், அதை மறுக்க அவ ஞல் இயலுமோ? எனவே, அவன் சான்ருேரின் கருத் துக்கு இசைந்தான். நாடு திரும்பின்ை; மணி முடி புனேந்தான்; செங்கோல் ஏந்தின்ை; அருளாட்சி புரியத் தலைப்பட்டான். அறிந்தனர் புலவரும் பாணரும், அள விலா மகிழ்வு கொண்டனர். 'கொடை வள்ளல் குமணன் வாழ்க! வள்ளலின் தலே காத்த பெருந்தலைச் சாத்தனுர் பெருந்தலைச் சாத்தனுரே! அவர் வாழ்க! நீடு வாழ்க!” என்ற வாழ்த்தொலி எண்டிசையிலும் எதிரொலித்தது. அறம் வென்றது! தமிழ் வென்றது! என மாந்தர் யாவ ரும் இன்பக் குரவையாடினர்; பாடினர்; பண்டுபோலக் குமணவள்ளலின் திருகாட்டில் கலே முழங்கியது ; கருணே பெருகியது; எழில் கிறைந்தது; இன்பம் சுரந்தது.

மீண்டும் மணி முடி தாங்கிக் குடி புறங்காக்க ஒருப் பட்ட குமணவள்ளலின் திருவோலக்கத்தில் சின்னுளே தங்கினர் சாத்தனர். வறுமையால் துயருறும் தம் தலே வியாரது துயரமும் மழலைச் செல்வத்தின் அவலமும்