பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



VI
தமிழர் தொழில் நிலை

ஒரு நாட்டின் கல்வி கிலை உயருமானால், அதன் பயனாகப் பல்வேறு தொழில்களும் திருத்தம் பெற்று வளர்ச்சியுறுதல் எளிதாகும். கல்வியின் பயனாக அறிவும், அவ்வறிவின் பயனாகத் தொழில்களும் வளர்ச்சியடைதலே வாழ்க்கையின் வளர்ச்சி நிலையாகும்.

தமிழர் தம் அறிவின் திறத்தால் கண்டுணர்த்திய பல்வேறு கலைகள் இவையென முன்னர்க் குறிக்கப் பெற்றன.

வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப் பெறுவது உணவு. நிலமும் நீருங்கூடிய நிலையிலேதான் இவ்வுணவினை விளைவிக்க முடியும். நிலத்தை நன்றாக உழுது புழுதியாக்கி, நீர் பாய்ச்சி, நெல் முதலியவற்றை விளைவிக்கும் பயிர்த் தொழிலை மேற்கொள்வார் உழவர் என வழங்கப் பெறுவர். 'உழத்தல்' என்பது இடை விடாது முயலும் மெய்ம்முயற்சியைக் குறிக்கும் சொல்லாகும். மழை, பனி, வெயில் என்னும் கால வேறுபாட்டால் உடம்புக் குளவாகுக் தொல்லைகளை ஒரு சிறிதும் பொருட்படுத்தாது, நெற்றி வேர்வை நிலத்தில் விழ இடைவிடாது உழைக்கும் மெய்ம்முயற்சி இப் பயிர்த் தொழிலுக்கு வேண்டப்படுவ தாகலின், இத்தொழிலை உழவு என்ற சொல்லால் பண்டை யோர் வழங்கினர். உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்பெறும் எல்லாத் தொழில்களிலும் இவ்வுழவே தலைச்சிறந்த தொழில் என்பது அறிஞர் கொள்கை.

தமிழர் எல்லாத் தொழிலிலும் இவ்வுழவினையே தலையாக வைத்துச் சிறப்பித்தனர். உலக மக்கள் தாங்கள் விரும்பிய பல்வேறுதொழில்களையுஞ்செய்து பொருளீட்டி-