பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சங்ககாலத் தமிழ் மக்கள்


எடுத்துரைக்கும் பேச்சுரிமையும், தாம் விரும்பிய முறையில் கடவுள் வழிபாட்டினை அமைத்துக்கொள்ளும் சமய உரிமையும், விரும்பிய இடங்களுக்குத் தடையின்றிச் செல்லும் போக்குவரத்துரிமையும், தமக்கு இயன்ற தொழில்களைச் செய்து பொருளீட்டுதற்குரிய தொழிலுரிமையும் ஆகிய இவையெல்லாம் குடிமக்களின் கிழமைகளாகவே கருதப்பட்டு, அக்காலத் தமிழ் வேந்தர்களாற் காக்கப் பெற்றன. நுணுகி நோக்குங்கால், அக்காலத் தமிழர் அரசியல், ‘முடியாட்சி' என்ற பெயரால் நடைபெற்ற குடியாட்சியாகவே விளங்கினமை இனிது புலனாம்.

நாட்டின் பாதுகாப்புக்கு இன்றியமையாது வேண்டப்படுவது சேனை. அரசியல் வரம்புக்கு உட்பட்ட மக்களாகத் தங்களைக் கருதிக்கொண்டு, அவ்வரம்பில் அடங்கி வாழுந்திறம் நாட்டு மக்கள் உள்ளத்தில் நிலைபெறுதல் வேண்டும். தங்கள் கடமை உணர்ந்து நடக்கும் இயல்புடையவர்களே உரிமை பெற்ற குடிமக்களாகக் கருதப்படுவார்கள். அரசியல் வேலியின் துணை கொண்டு ஒரு நாட்டில் முதற்கண் விளைவித்துக்கொள்ள வேண்டிய பொருள், அமைதி வழி நின்று உழைக்கும் உழைப்பே ஆகும். ஏனைய உணவு முதலாகவுள்ள நுகர்பொருள்கள் யாவும் இவ்வுழைப்பின் பயனாகத் தாமே உளவாவனவாம். நாட்டிற்கிடைக்கும் பொருள்களை மக்கள் பகிர்ந்து உண்டு வாழ்தற்கு அமைந்த நெறி முறைகளை வகுத்து நாளுங் கண்காணிக்குகந் திறமுடையானே அமைச்சனாவான். தமக்குரிய நிலப்பகுதியை ஆளும் மன்னர், பிற நாட்டு அரசியலின் உதவியைப் பெறுதல் கருதி நண்பு செய்தொழுகுதல் தமது அரசியலை வளர்த்தற்குரிய வழியாகும். உலக வாழ்வின் பொது அமைதியைக் கருதாது ஒரு நாட்-