பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழகம்

17


டின்மேற் போர் தொடங்குவார் யாவரேயாயினும், அவரை அஞ்சாது எதிர்த்து நின்று பொருது வெல்லுதற்குப் பொருத்தமான இடமும் சார்பும் ஆகிய காவலைத் தேடி உருவாக்கும் நிலையே ‘அரண்’ எனப்படும். மேற்கூறிய அரசியல் உறுப்புக்கள் ஆறனையும் குறைவறப்பெற்றவனே அரசர்களுட்சிறந்தவன் ஆவன். அரசியல் அங்கங்களாகிய படை, குடி, பொருள், அமைச்சு, நட்பு, அரண் என்னும் இவற்றின் இயல்புகள் யாவும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் பொருட்பாலில் நன்கு விளக்கப்பெற்றுள்ளன. திருவள்ளுவர் கூறும் அரசியல் நுட்பங்களெல்லாம் சங்ககாலத் தமிழ் வேந்தர் ஆட்சி முறையிலிருந்து நேரிற்கண்டுணர்ந்து வெளியிட்ட அனுபவ உண்மைகளேயாகும்.

தமிழரசர்கள் அரசியல் முறையிற்பிழையாது, அறனல்லாதன தங்கள் நாட்டின்கண் நிகழவொட்டாமல் தடுத்து, வீரத்தின் வழுவாத மேன்மையுடையவர்களாய் விளங்கினார்கள். மன்னனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது, அவனுடைய படை வன்மையன்று ; யாரிடத்தும் விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நிலையில் நடந்துகொள்ளும் அரசியல் முறையேயாம்.

“வேலன்று வென்றி தருவது; மன்னவன்
கோல்;அதூஉம் கோடா தெனின்.”

என வரும் வள்ளுவர் வாய்மொழி இங்கு நினைத்தற்குரியதாம். மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை நோக்கி, அறத்தின் வழிப்பட்ட அரசியல் முறையினை ஒரு புறப்பாடலால் (புறம். 55) அறிவுறுத்துகின்றார்;

2