பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 9

கரிய மிளகுப்பொதிகளும், மேருமலையில் தோன்றிய மணியும், பொன்னும், பொதியமலையில் தோன்றிய அகி அலும், ஆரமும், தென்கடல் முத்தும், கீழ்க்கடல் பவளமும், கங்கை பாயும் வடநாட்டினின்றும் வந்த யானே முதலா யினவும், காவிரி யாற்ருல் விளைந்த பல்வேறு பொருள் களும், கடாரமாகிய பர்மாவினின்றும் வந்த கணக்கற்ற பொருள்களும் ஆகிய அரிய, பெரிய பொருள்கள் எல்லாம் அளவு அறியமாட்டாமல் கிறைந்து வளம் மிகுந்த கடை வீதிகளில், அப் பொருள்களே விற்போர், பழியஞ்சும் பண் பினர் ஆகவே, பொருள்களை வாங்குவோர்பால், அப் பொருள்களின் தன்மை, விலே, தமக்கு வரும் ஆக்கம் இவற்றை உண்மையாகக் கூறியும், பொருள்களைக் கொள் ளும்போது தாம் கொடுக்கும் அப்பொருளுக்குரிய விலைக்கு மேற்பட்ட பொருள்களைக் கொள்ளாமலும், பொருளைப் பிறர்க்கு விற்கும்போது, அப் பொருட்கு விலை யாகப் பெற்றதற்குக் குறைவாகக் கொடுக்காமலும், தம் பொருளையும் பிறர்பொருளையும் ஒன்றென மதித்து விற்பர்.

மகதச் சிற்பரும், மராட்டக் கொல்லரும், யவனத்தச் சரும் கூடிக் கண்ணேக் கவரும் வனப்புடன் அமைத்த அா சன் கோயில் பட்டினப்பாக்கத்தே விளங்கும் ; அரண்மனை யைச் சூழ, கடும்பரி கடவுசர், களிற்றின்பாகர், தெந்ேதேர் ஊருகர், கடுங்கண் மறவர் முதலாய கால்வகைப் படை யாளர் வாழும் தெருக்கள் அமைந்துள்ளன; தேரோடும் தெருவும், பெரிய கடைத் தெருவும் இருப்பதும் ஈண்டே. மறையோர், வீழ்குடி உழவர், மருத்துவர், காலக் கணிதர் முதலியோர் தனித்தனியே வாழும் தெருக்களும் உண்டு. முத்துக் கோப்போர், வளையல் அறுப்போர், நாழிகைக் கணக்கர், காவற்கணிகையர், ஆடல் கூத்தியர், நகை வேழம்பர் முதலியோர் வாழும் இடங்களும் இங்கேதான்். ஆக, பட்டினப் பாக்கம், அரசனும், அவன் குழுவும், அரச குல் மதிக்கத் தக்க மாநிதி உடையாரும், அவர்க்கு இன் பம் ஊட்ட ஆவன புரிவோரும் ஆகிய உயர் வகுப்பு மக்கள் வாழிடமாம் எனல் பொருந்தும் என்க. கீழே வீழ்ந்து