பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய்

சாவர்; இவ்விரு திறத்து அரசருள்ளும், இளங்குட்டுவன், கணேக்கால் இரும்பொறை, கருவூர்ச் சாத்தன், கோட்டம் பலத்துத் துஞ்சிய மாக்கோதை, நம்பிகுட்டுவனுர், பாலே பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ, முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் முதலாய எண்மரும் காடாண்டு நற் புகழ் பெற்றதோடு, புலமையுற்றுப் புகழ் பெற்றவரும் ஆவர்; இவர் பாடிய பாக்கள் பலவும், எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலாம் பழந்தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ளன. -

இவ்வேந்தருட் சிலர், இவன், இன்னுர் மகன்; இவன், இன்னுரைப் பெற்றவன்; இவன், இன்னுரோடு உடன்பிறக் தவன் என்ற வரலாறு உணரத்தக்க சிலையில் உள்ளனர் எனினும், அவருள் பலரைப் பற்றிய இவ்வுறவுமுறை விளங்கவில்லை ஆதலாலும், முறை விளங்க சிற்பார் எவரும், இன்னுர்பின் இன்னர் ஆண்டனர் எனத் துணிந்து கூறுதற் கில்லே ஆதலாலும், இவரை அவர்தம் பெயர்காட்டும் அகர வரிசைப்படி வகைப்படுத்தியுள்ளோம்.