பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சோழர்

' உவவுத்தலே வந்த பெருநாள் அமையத்து இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் புன் கண் மாலை மலை மறைந் தாங்குத் தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த புறப்புண் நாணி மறத்தகை மன்னன் வாள் வடக்கு இருந்தனன்.”

(கழார்த் தலையார், புறம் : சுடு}

'கரிகால் வளவ !

சென்றமர்க் கடந்தகின் ஆற்றல் தோன்ற வென்முேய் நின்னினும் கல்லன் அன்றே? கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலே மிகப் புகழ் உலகம் எய்திப் புறப்புண் காணி வடக்கிருந் தோனே.”

(வெண்ணிக் குயத்தியார், புறம் : சுசு)

வெண்ணியில் கரிகாலளுெடு போரிட்டுத் தோற்ருே ருள், உயிர் இழவாது பிழைத்த வேளிர் ஒன்பதின்மர், மீண்டும் ஒன்று கூடி வாகையெனும் இடத்தே வந்து எதிர்த்தனர்; ஆண்டும் கரிகாலனே வெற்றி பெற்ருன் ; அவ் வொன்பது குறுகிலத் தலைவர்களும் முரசு, குடை முதலாம் தம் அரச விருதுகள் அக்களத்திலேயே ஒழிய, நடுப்பகலிலேயே தோற்று ஒடி உய்ந்தனர் :

' பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்

குடா வாகைப் பறந்தலை ஆடுபெற ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த பிடில் மன்னர் போல, ஒடுவை.”

(பாணர், அகம்: சsடு)

கரிகாற் பெருவளத்தான்், வெண்ணி, வாகை முதலாய இடங்களில் பெற்ற வெற்றியொடு அமையானுய்த் தமிழ் நாடெங்கும் கண்டு கொண்டு சென்று, ஆங்காங்குள்ள முடியுடை வேந்தர், குறுகில மன்னர் முதலியோரை வென்று வெற்றி வீரய்ை விளங்கிளுன் ; இவ்வாறு அவனுல்

வெல்லப்பட்டோர், ஒளியர், அருவாளர், வடவர், குடவர்,