பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாற் பெருவளத்தான்் 39.

தென்னவர், பொதுவர், இருங்கோவேள் முதலியோராவர் என்று கூறுகிருர் கடியலூர் உருத்திரங் கண்ணனுர் :

'பல் ஒளியர் பணி பொடுங்கத்,

தொல் அருவாளர் தொழில் கேட்ப, வடவர் வாடக், குடவர் கூம்பத், தென்னவன் திறல் கெடச், சீறி மன்னர் மன்னெயில் கதுவும் மதனுடை நோன்தாள் மாத்தான்ை, மற மொய்ம்பின், செங்கண்ணுற் செயிர்த்து நோக்கிப் புன் பொதுவர் வழி பொன்ற இருங்கோ வேள் மருங்கு சாய.”

(பட்டினப் பாலை : உஎச-அஉ}

தமிழ்நாடு முழுதும் தன் ஆணைக்கீழ் அடங்கியது. கண்டும், கரிகாலன், பெற்றது மகிழானுய் மேலும் போரே விரும்பினகை, தன்ன எதிர்ப்போர் தமிழகத்தில் யாரும் இன்மையறிந்து, நல்ல நாளில், வாள், குடை, முரசு முதலா யவற்றை முன்னே போகவிட்டு, என் வலிகெழு தோளின் பெருமையை, இம் மண்ணக மருங்கில் என் கண்ணுர் பெறுக’ என வஞ்சினம் கூறி, வட நாடு நோக்கிச் சென் முன் ; சென்ருனே, இமயம் இடை நின்று தடுத்துவிட்டது; அதல்ை சினங் கொண்ட சோழர்குலக் குரிசில் அதன் உச்சியிற் புலிபொறித்து மீண்டான் ; மீளுங்கால், வச்சிா நாட்டரசன் இறைக்கடகைக் கொடுத்த முத்துப்பந்தல், மகத நாட்டாசன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிடிண்ட பம், அவந்தி வேந்தன் உவந்து கொடுத்த தோரணவாயில் முதலாயவற்றைப் பெற்றுத் தமிழ்நாடு வந்தடைந்தான்் :

'செருவெங் காதலிற் றிருமா வளவன்

வாளும், குடையும் மயிர்க் கண் முரசும் நாளொடு பெயர்த்து கண்ணுர்ப் பெறுகஇம் மண்ணக மருங்கின் என் வலிகெழு தோளெனப் புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள் அசைவில் ஊக்கத்து சைபிறக் கொழியப்