பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாற் பெருவளத்தான்் 51

முதற் கரிகாலனைப் பாடிய பாணாே, இரண்டாம் கரி காலன் கங்தை உருவப்பஃறேர் இளையோனையும், இமயவரம் பன் நெடுஞ்சேரலாதன் மகன் செங்குட்டுவனேயும் பாடி யுள்ளார்; கரிகாலன் இருவர் எனக் கொள்ளாது, ஒருவன கவே கொண்டு, பரணர், கரிகாலனே அவன் ஆட்சிக்கால இறுதியிலும், அஃதாவது கி. மு. 20-இலும், சேரன் செங் குட்டுவனே அவன் ஆட்சித் தொடக்கத்திலும், அஃதாவது கி. பி. 166-இலும் பாடியதாகக் கொண்டாலும், பரணர் நூற்று எண்பத்தாறு ஆண்டுகட்குமேல் (கி. மு. 20இ. பி. 166: 186) வாழ்ந்தவராகக் கோடல்வேண்டும்; இம் முடிவு கொள்ள ற் பாலதன்று; கரிகாலனுக்கும், செங்குட்டு வனுக்கும் இடைப்பட்டகாலமே இத்துணைப் பெரிது என் முல், கரிகாலன் தந்தை உருவப்பஃறேர். இளேயோனுக்கும், செங்குட்டுவனுக்கும் இடைப்பட்டகாலத்தை நோக்கின், பரணர் வாழ்நாள் மேலும் நீளும். இனி, கரிகாலனே இருவ ாகவேகொண்டு, பாணர் அகப்புறப் பாடல்களால் முதற் கரிகாலனைப் பாடியுள்ளார் என்பதை வைத்து நோக்கினுல், அவர் வாழ்நாள் எத்துணே நீளமுடையது என்பதை எண் னிப் பார்க்கவே இயலாது; இதல்ை, இரண்டாம் கரிகால னுக்கும், செங்குட்டுவனுக்கும் வரையறுத்த காலமும் பொருந்தாது; அக்காலம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு கரிகாலன் இருவர் எனக் கொள்வதும் பொருங் தாது.

இவ்வாறு அவர்கள் கூறியகாலம் பொருந்தாமை யோடு, மேலும் ஒரு அகச்சான்று, கரிகாலன் இருவர் என்ற கொள்கையொடு முரண்படுவதையும் அவர்கள் அறிந்திலர், முதற் கரிகாலனைப் பாராட்டிய பாக்கள் என்று அவர்களால் கூறப்பெறும், பரணர், மாமூலனுர், வெண்ணிக் குயத்தியார் முதலியோரால் பாடப்பெற்ற அகப்புறப் பாடல்களில் எடுத்துக் கூறப்பெற்ற வெண்ணிப் பறந்தலை நிகழ்ச்சி, அவர்களால் இரண்டாம் கரிகாலனைப் பற்றியது என்று கூறப்பெற்ற பொரு காற்றுப் படையி லும், அப்பாட்டுடைத் தலைவன் செயலாகக் கூறப்பட்.