பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சோழர்

காம் பழங்கடனேயேயன்றி, காட்டு கிலத்திற்காம் பழங் கடன்கள் அனைத்தையும் விடுதலை செய்தான்்.

' வருபடை தாங்கிப் பெயர்புறத்து ஆர்த்துப்

பொருபடை தரூஉம் கொற்றமும், உழுபடை ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே;

நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது பகடு புறக் கருகர் பாரம் ஒம்பிக் குடிபுறம் தருகுவை யாயின், கின் அடிபுறம் தருகுவர் அடங்கா தோரே.’ (புறம் : கூடு) * பொன்மலை சார்ந்த காகமும் பொன்னிறம்பெறும்” என்றும், ' கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றும் ஆன்ருேர் கூறுவர். புலவர்பலர் போற்ற வாழும் கல்வாய்ப்புற்ற கிள்ளிவளவன், தான்ும் ஒரு புலவனுய் விளங்கினன். ' தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன் பண்ணன்', ' கைவள் ஈகைப் பண்ணன் ', * மாற்ருேர் மலைமருள் யானே மண்டமர் ஒழித்த கழற்கால் பண்ணன்' எனப் புலவர் பாராட்டும் பெருமை மிக்கோனுய பண்ணன் என்பான், காவிரிக்கரையில் இருக்க சிறுகுடி எனும் சிறந்த ஊரில் வாழ்ந்திருந்தான்். பெரும்படைத் தலைவனும், பெருங்கொடை வள்ளலுமாய அப்பண்ணனைப் பாடிப் பாராட்டிய வளவன் பாட்டொன்று புறநானூற்றில் இடம் பெற்றுளது.

பண்ணன்பால் பரிசில்பெறக் கருதிய பாணன் ஒருவன் அவன் சிறுகுடியை நோக்கிச் செல்கிருன்; பண்ணன் பால் பரிசில் பெற்ற இளைஞரும் முதியருமாய பாணர் பல்லோர், வேறுவேறு திசைநோக்கி வரிசை வரிசையாகச் செல்லு கின்ற காட்சியினையும் காண்கிருன் அப்பாணன் , பழுமரம் ஒன்றில் பழம் உண்ணவந்த ஒன்றுகூடிநிற்கும் பறவைகள் எழுப்பும் பேரொலிபோல், பண்ணன் அறச்சாலையில் உணவுபெறுவார் எழுப்பும் ஒசையும் கேட்கிறது. அவன் சிறுகுடி அண்மையில் உளது என்பதை உணர்த்துகின்றன இவை. ஆயினும், பாணன் பசிக்கொடுமை இதை உணர்ந்த