பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Y6 சோழர்

வரின் வாழாத மானமுடைமை முதலாம் அவன்பால் காணலாம் அரும்பண்புகளைக் கண்டே பாராட்டியுள்ளனர்; ஆகவே, இப் பாராட்டே உண்மைப் பாராட்டாம்: இவ் வாறு புலவர்தம் உண்மைப்பாராட்டைப் பெறும் உயர்

புகழ் கொண்டவன் கோப்பெருஞ் சோழன் ஒருவனே.

கோப்பெருஞ் சோழன், புல்லாற்றார் எயிற்றியனுர், கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூக நாதனர், பொத்தியார் போன்ற புலவர்பெருமக்கள் போற்ற உறையூர்க்கண் வாழ்ந்திருந்த காலத்தே, பாண்டி நாட்டில் பிசிர் என்னும் ஊரின்கண் ஆந்தையார் என்ற அறிஞர் பெருந்தகை ஒரு வர் வாழ்ந்திருந்தார் ; வாழ்வாங்கு வாழும் பிசிராங்தையா ரைக் கோப்பெருஞ் சோழன், தன் நண்பருள் பெரு நண்ப ாய் மதித்துப் பெருமிதம் கொண்டான் ; ' பிசிராங்தை யார், தெற்கே மிகச் சேய்மைக் கண்ணதாகிய பாண்டி காட் டினாாயினும், அவரே என் உயிரைப்பேனும் உயரிய நண்ப சாவர்; அவர், பிறர் பெயரையும் பழித்தறியார் ; எவரிடத் தும் இனியராய்ப் பழகும் பண்புடையார் ; என் உயிரைப் பிணிக்கும் உயர்ந்த நட்புடையார் ; பொய் கூறுவதால் புகழ் மிக உண்டாம் எனக் கூறினும், புகழை விரும்பிப் பொய் கூறியறியார்; தன் பெயரைக் கூறுந்தொறும், என் பெயர் கோப்பெருஞ் சோழன் ' என, என் பெயரையே தம் பெயராக்கொண்டு கூறும் அத்துணை அன்பும், உரிமை யும் என்பால் கொண்டவர் ' எனப் பலரும் அறிய அவர் புகழ் பாடிக்கொண்டிருந்தான்் :

" தென்னம் பொருப்பன் கன்னட் டுள்ளும் பிசிரோன் என்ப, என் உயிர் ஒம்புகன் ”

(புறம் : உகடு) ‘ இகழ்விலன்; இனியன் , யாத்த நண்பினன் ; புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே : தன்பெயர் கிளக்கும் காலே, என்பெயர் பேதைச் சோழன் என்னும் சிறந்த காதற் கிழமையும் உடையன்’ (புறம்: உக சு)