பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்களுன் 85

  • குழவி இறப்பினும்” என்ற பாடலைப் பாடிப் பக்கத்தே வைத்துவிட்டு உறங்கிவிட்டான். சோமான் கணக்கா லிரும்பொறையின் அவைக்களத்தே யிருந்து அவன் புகழ் பாடிப் பாவும் புலவராய பொய்கையார், அரசனுக்கு நேர்ந்த கதியினைக் கண்டார்; கலங்கினர்; அவனேச் சிறை வீடுசெய்து சிறப்பித்தல் தம் கடன் என உணர்ந்தார்; சோழன் செங்களுன், சோனேச் சிறைசெய்த கொடி யோன் எனினும், புலவர்பாலும், அவர்தம் பாக்கள்பாலும் பெரு மதிப்புடையான் என்பதை அறிந்தவராதலின், உடனே அவன் அவை அடைந்து, அவனுக்கும், இரும் பொறைக்கும் நடந்த கழுமலப்போரின் சிறப்பையும், அதில் செங்களுன் பெற்ற வெற்றிச் சிறப்பினையும் பாராட் டிக் களவழி நாற்பது ” என்ற பெயரால் நாற்பது பாக்க ளைப் பாடி சின்றார் ; அவர் பாடற் பொருளும், பெருமை யும் உணர்ந்த செங்கணுன், அவர் உள்ளம் உவக்கும் வண் ணம், அவர் அன்பு காட்டும் அரசனுய கணக்கால் இரும் பொறையைச் சிறை விடுத்தான்். அவ்விரண்டாலும் அறி யக்கிடக்கும் வரலாறு இது. இவ் வரலாற்றினேச், சோழர் வரலாறு உரைக்கும் இடைக்கால நூல்கள் சிலவும் உரைத் துளளன :

'களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய, உதியன்

கால்வழித் தளையை வெட்டி அாசிட்ட பரிசும்.”

(கலிங்கத்துப்பாணி) 'இன்னருளின் -

மேதக்க பொய்கை கவிகொண்டு, வில்லவனைப் பாதத் தளேவிட்ட பார்த்திபனும்.” - - - (விக்கிரம சோழனுலா) 'பொறையனைப் பொய்கை கவிக்குக்

கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோனும்.”

(குலோத்துங்கச் சோழனுலா) 'பொய்கை களவழி சாற்பதுக்கு

வில்லவன் கால்தளையை விட்டக்கோன்."

- (இராசராச சோழனுலா)