பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சோழர்

கிள்ளி பெரிதும் விழிப்பாயுளன் ; காலம் கடத்தின் பின்னர் அவனே உறையூரினின்றும் ஒழித்தல் அரிதாகி விடும். ஆகவே, அவனே இப்போதே எதிர்த்தல் வேண்டும் எனத் துணிந்தான்்; உடனே பெரும்படையொன்று உறை யூர் நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது , அஃதறிந்த நெடுங்கிள்ளி. வேண்டும் பொருள்களோடு உறையூர்க் கோட்டையுட் புகுந்து அடங்குவானுயினன். நலங்கிள்ளி யின் பெரும்படை உறையூர்க் கோட்டையை முற்றிக் கொண்டது; முற்றுகை செய்து நாள் பல ஆயின மதிலை அழித்து உட்புக நலங்கிள்ளியும் எண்ணினனல்லன்; மகிற் புறம் போந்து போரிட்டு வெல்ல நெடுங் கிள்ளியும் கினேந்தான்ல்லன்.

இங்கிலையில், ஒருகுடிப் பிறந்த அரசர் இருவர், இவ் வாறு பகைத் தப் போரிடல் பழியாம் என உணர்ந்த கோஆர்கிழார், அவ்விருவர் உள்ளத்தும் உணர்வுமிகுமாறு இருவரையும் அடுத்து, விேர் இருவீரும் ஒருகுடிவத்தோ ராவீர்; விேர் மேற்கொண்ட இப்போரில் இருவரும் வெற்றி கோடல் ஒருபோதும் இயலாது ; ஒருவர் வெற்றிபெற வேண்டின், மற்றொருவர் தோற்றல் இன்றியமையாதது ; உங்கள் இருவரில் தோற்போர் யாவரேயாயினும் தோற்றது சோழர் குடியேயாம்; சோழன் ஒருவன் தோற்ருன் எனப் பகையரசர் விேர் பிறந்த குடியைப் பழிப்பதைக் காணல் தன்ருே பிறந்த குடிக்குப் பெருமை தேடித்தருதலன்ருே குடிப்பிறந்தார் கடமையாம் ; அதை மறந்து பிறந்த குடிக்குப் பழிதேடித் தருதல் பண்புடைத்தன்று,” என்று கூறினர்.

நெடுங்கிள்ளி, புலவர் கூறும் பொருள் நிறை அறவுரை களைப் பொன்னேபோல் போற்றும் பெருங்குடி வந்தோனே யாயினும், உறையூர்க்கோட்டையைக் கைப்பற்றி ஆள வேண்டும் என்ற ஆசைப்பெருக்குடையணுகவே, அவர் தம் அறிவுரையை அக்காலை மனங்கொளானுயினன் ; நெடுங் கிள்ளியை வென்று, உறையூரிலிருந்து ஊராள்வான யின்ை.